Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சே குவேரா திருவுடல் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்ட தினம் இன்று

எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா இப்படிச் சொன்னால் இவரைப்பற்றி தெரியாது. சே குவேரா என்று சொல்லும்போது, மயிர் கூச்செரியும் வீரர் இவர். தென்னமெரிக்க நாடுகளின் விடுதலைக்கும் வளமைக்கும் பாடுபட்ட தன்னலமில்லாத தலைவன் இவர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரப்பிடியில் சிக்கி இருந்த கியூபாவை பிடல் கேஸ்ட்ரோவோடு இணைந்து மீட்டுக்கொடுத்த வீரத் திருமகன் சே. விடுதலை பெற்ற கியூபாவில் தலைமைத் தளபதி பொறுப்பை ஏற்ற இவர், அங்கேயே சொகுசான பதவியில் வாழப்பிடிக்காமல் 1965-ம் ஆண்டு கியூபாவை விட்டுக் கிளம்பினார். தென்னமெரிக்க நாடுகள் மொத்தத்தையும் இணைத்து ஒருமித்த வலிமையான சுதந்திர நாடாக்க விரும்பினார். இது மட்டும் நடந்தால் அதுவரை சுரண்டி வாழ்ந்த மேற்கத்திய நாடுகளின் கதி என்னாவது என்று யோசித்தன. விளைவு, பொலிவியாவில் அந்நாட்டு சுதந்திரத்துக்காக போராடிய குவேராவை அமெரிக்க படைகள் சூழ்ந்தன. 1967-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் நாள் சே குவேரா அவரது 39 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார். உலகமே அதிர்ந்து போன அந்த துயரச் சம்பவத்தை தொடர்ந்து சே-வின் புதைக்கப்பட்ட  திருவுடலை தேடும் பணியை கியூபா செய்தது. முப்பது ஆண்டுகளைக் கடந்தும் அவரது திருவுடல் கிடைக்கவே இல்லை. 

சே குவேரா

கொலை செய்து புதைக்கப்பட்ட சே மற்றும் இரு வீரர்களது சடலங்களைத் தேடியெடுக்கும் பணி 1995-ம் ஆண்டு மீண்டும்  தொடங்கியது. 1997-ம் ஆண்டு ஜூன் 28 அன்று பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு உடல்  மாவீரர் சேவின் உடல் என்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 1997-ம் ஆண்டு ஜூலை 13 அன்று சேவின் உடல் மிச்சங்கள் கியூபாவை வந்தடைந்தது. அந்நாடே அந்த வீரத்திருமகனுக்கு தனது  அஞ்சலியை செலுத்தியது. சே குவேரா மற்றும் அவரது தோழர்களின் திருவுடல் மிச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்ட தினம் இன்று.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close