Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெலிகிராம் செயலி சேவைக்குத் தடை..! இந்தோனேஷியா அதிரடி

தீவிரவாதம் குறித்த பிரசாரத்தை தடுக்க டெலிகிராம் தகவல் சேவையைத் தடை செய்துள்ளது இந்தோனேஷியா. 

இந்தோனேசியா டெலிகிராம்

சிரியாவிலும் ஈராக்கிலும் தீவிரவாதிகளின் ஆதிக்கமும் செல்வாக்கும் குறைந்து வருகிறது. இவர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத் தெற்காசிய நாடுகளில் தங்களுடைய கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக 'இந்தோனேஷியாவில் உள்நாட்டு மக்களிடையே தீவிரவாதம் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகப் பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்' என்கிறது இந்தோனேஷிய அரசு.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக அண்மையில் ஜகார்த்தா பேருந்து நிலையத்தில் இரட்டை தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பின் இந்தோனேஷியா தீவிரவாத எதிர்ப்புக்காக மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் ஒத்துழைப்பைக் கேட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் சேவையைப் பயன்படுத்தும்போது பரிமாறிக்கொள்ளும் தகவலைக் கண்காணிப்பதில் சிரமங்கள் உள்ளன. இதைத் தீவிரவாத அமைப்புகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. அண்மையில் லண்டனில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில்கூட செயலி வழி தகவல் சேவையைப் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், பல நாடுகளிலும் பாதுகாப்பு பணிக்காகச் செயலி வழி தகவல் சேவையைக் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement