வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (15/07/2017)

கடைசி தொடர்பு:19:00 (15/07/2017)

இந்தியாவுடன் ராணுவ மேம்பாடு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

இந்தியாவுடனான ராணுவ மேம்பாட்டிற்காக அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இந்தியப் பிரதமர் மோடியும் மிகச் சமீபத்தில் சந்தித்துக்கொண்ட நிகழ்வு உலக அளவில் ஒரு முக்கியமான சந்திப்பாகப் பார்க்கப்பட்டது. அந்தச் சந்திப்பின் போது இந்திய- அமெரிக்க உறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளும் முக்கிய ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சந்திப்பின் போது இருநாட்டு ராணுவ உறவை மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய ராணுவ மேம்பாட்டுக்காக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு 344-க்கு 81 என்ற வாக்கு எண்ணிக்கைக் கணக்கில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோவின் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மோடி- ட்ரம்ப் சந்திப்பின் போது சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 22 ஆளில்லா உளவுப்படை விமானங்கள் வாங்குவதற்காக கையெழுத்தான ஒப்பந்தம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.