பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பதவி விலகுகிறாரா நவாஸ் ஷெரிப்..? | Panama Papers Issue: Is Nawaz Sharif resigning?

வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (16/07/2017)

கடைசி தொடர்பு:17:22 (16/07/2017)

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பதவி விலகுகிறாரா நவாஸ் ஷெரிப்..?

பனாமா ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப், பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது.

நவாஸ் ஷரிஃப்

பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, பனாமா லீக்ஸ் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப்  பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது.

நவாஸ் ஷரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையின்போது கடந்த மே மாதம் ‘கூட்டு விசாரணைக் குழு’ ஒன்று நீதிமன்றத்தால் விசாரணைக்காக உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டு விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் நவாஸ் ஷெரிப் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், எதிர்கட்சிகள் மட்டுமல்லாது ராணுவமும் நவாஸ் பதவி விலக வேண்டும் எனக் கோருவதாகக் கூறப்படுகிறது.