Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாத தாக்குதல்களால் ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் மரணங்கள்... எச்சரிக்கும் ஐ.நா!

உள்நாட்டுப் போர் மற்றும் ஐ.எஸ் தாக்குதல்களால் ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 1,662 பொது மக்கள் இறந்துள்ளதாக ஐ.நா சபை கூறியுள்ளது. மேலும், 3,500 பேருக்கும் மேல் பல்வேறு தாக்குதல்களால் காயமடைந்துள்ளார்கள் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்

அரசுக்கு எதிரான படைகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால்தான் பெரும்பான்மையான இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள்தான் ஆப்கானிஸ்தானில் அதிகமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாம். இந்த இறப்புகளில் 20 சதவிகிதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து ஐ.நா சபை, 'இப்போது ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் போரினால் ஏற்பட்ட இறப்புகள் மற்றும் இழப்புகள் மிக மிக அதிகம். இந்தத் தீவிரவாத தாக்குதல்களில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது இழப்பை இன்னும் அதிகரிக்கின்றன. முதலில் அது நிறுத்தப்பட வேண்டும்' என்று கவலையுடன் கூறியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close