உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்த கத்தாருக்கு எதிர்ப்பா?

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் கத்தாரில் நடத்துவதற்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன என்ற செய்தியில் உண்மையில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால்பந்து

Representative image

தீவிரவாதத்துக்குத் துணைபுரிவதாகக் குற்றம்சாட்டப்பட்டு கத்தார், வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. சவுதி, பக்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்தன. வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, கத்தாருக்கு சில நிபந்தனைகள் விதித்து அதற்கு ஒப்புக்கொண்டால் தடை விலக்கப்படும் என சவுதி அரேபியா அறிவித்தபோது அதற்கு கத்தார் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதைத்தொடர்ந்து, அரபு நாடுகளின் நடவடிக்கையால் கத்தார் மிகவும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வருகிற 2022-ம் ஆண்டு கத்தாரில் உலகக்கோப்பைக் கால்பந்து தொடர் நடக்க உள்ளது.

இப்போட்டிகளை கத்தார் நடத்துவதற்கு வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக சில சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன. இந்நிலையில், அச்செய்திகளில் உண்மை இல்லை என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!