Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவு!

ரஷ்யாவில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

நிலநடுக்கம்

ரஷ்ய நாட்டில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7. ஆகப் பதிவானது. பீரிங் தீவிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 11.7 கிலோ மீட்டர் ஆழத்தில் வலிமை வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்தத் தகவல்கள் இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியில் உள்ள கிளியூசெஸ்காய் எரிமலை வெடித்தது. கடல் அலைகளும் மூன்று அடிகளுக்கு மேல் எழும்பியதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் முதலில் விடுக்கப்பட்டது. பின்னர் அந்த அறிவிப்பு திரும்பப்பெற்றது. வலிமையான நிலநடுக்கம் என்பதால் அதிகளவில் சேதாரங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், அதிகாரபூர்வமானத் தகவல்கள் ஏதும் இதுவரையில் முழுமையாக வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு அரசின் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக ரஷ்ய நிலநடுக்கம் கருதப்படுகிறது. முன்னதாக பசிபிக் பெருங்கடலில் கடந்த ஜனவரி மாதம் மிகவும் வலிமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 7.9 ஆகப் பதிவானது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close