Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை... வெளியுறவுத்துறை முக்கியத் தகவல்!

இந்திய - சீன எல்லையில் தொடர்ந்து பிரச்னை நிலவிவரும் நிலையில், வெளியுறவுத்துறை செயலர் ஜெய்ஷங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் குழுவைச் சந்தித்து இந்த விஷயம்குறித்து விளக்கமளித்தார். 
 

ஜெய்ஷங்கர்

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூடான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குகுழிகளை அழித்தன. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. இதைத் தொடர்ந்து, இருநாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், இந்தியா - சீன எல்லைப் பிரச்னைகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் விளக்கம் அளித்தார் ஜெய்ஷங்கர். இந்த சந்திப்பின்போது, அனைத்துக் கட்சித் தலைவர்களும் இருந்தனர். குறிப்பாக காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, சசி தரூர், தி.மு.க. சார்பில் கனிமொழி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

நாடாளுமன்றக் குழுவிடம் ஜெய்ஷங்கர், 'இந்தியா - சீனா இடையில் நிலவிவரும் பிரச்னையைப் பேச்சுவார்த்தைமூலம் தீர்க்க, அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. அதே சமயத்தில், இந்தியாவைப் பொறுத்தவரை நம் தரப்பு வாதத்தில் மிகவும் உறுதியுடன் இருக்கிறோம். இதேபோல சீனவும் அவர்கள் தரப்பு வாதத்தில் விடாப்படியாக இருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் இருக்கும் தவறை நாம் முடிந்தவரை எடுத்துக் கூறி வருகிறோம். அதீத தேசப்பற்று மற்றும் ஊடகங்கள் இந்த விஷயத்துக்கு கொடுத்துவரும் முக்கியத்துவமும் இந்தப் பிரச்னை இழுபறியான நிலையில் இருப்பதற்குக் காரணமாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close