102 ஐபோன்களை ஆடைக்குள் மறைத்துக் கடத்த முயன்ற பெண்! 

சர்வதேச மொபைல்போன் சந்தையில் தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. ஹாங்காங்கில் இருந்து ஷென்ஷேன் நகருக்கு, பெண் ஒருவர் தனது உடைக்குள் 102 ஐபோன்களைக் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஜூலை 11-ம் தேதி, நடுத்தர வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடை அணியாமல் வித்தியாசமான ஆடை அணிந்து பயணம் மேற்கொண்டார். இதைக் கவனித்த சுங்க அதிகாரிகளுக்கு அந்தப் பெண் மீது கொஞ்சம் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்களது சந்தேகத்தைப் பூர்த்தி செய்துகொள்வதுக்காக, அந்தப் பெண்ணை மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்தப் பரிசோதனையில் அந்தப் பெண் தனது உடையில் 102 ஐபோன்கள் மற்றும் 15 கைக்கடிகாரங்களை மறைத்து வைத்துக் கடத்த முயன்றது உறுதியானது. இந்தப் பெண், தனது உடையில் 40 பவுண்டுகள் அதாவது, ஒன்பது கிலோ அளவுக்கு ஐபோன்கள் மற்றும் கைக்கடிகாரங்களை மறைத்து வைத்து, சட்ட விரோதமாகக் கடத்த முயன்றார். இறுதியில் சுங்க அதிகாரிகள் அந்தப் பெண்ணைக் கையும் களவுமாகப் பிடித்து விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!