வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (24/07/2017)

கடைசி தொடர்பு:13:04 (24/07/2017)

’ராணுவத்தைத் திரும்பப் பெறுங்கள்...’: இந்தியாவுக்கு சீனா வலியுறுத்தல்!

’இந்திய-சீன எல்லையான சிக்கிம் பகுதியில் நிலவிவரும் பதற்றம் குறைய, இந்தியா தனது படைகளைத் திரும்பப்பெற வேண்டும்’ என சீனா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா- சீனா

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குகுழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. 

இதைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க இரு நாடுகளும்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அமெரிக்காவும் கோரியது. இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் உள்ள ராணுவ வீரர்களை இந்தியா திரும்பப்பெற வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டுமானால், இந்தியா குவித்திருக்கும் ராணுவப் படையைத் திரும்பப்பெற வேண்டும் என சீனா, இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.