கொரியா தீபகற்பம் மீது பறந்த போர் விமானங்கள்: எச்சரிக்கை விடுக்கிறதா அமெரிக்கா..? | American war crafts over Korea increses the tension

வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (30/07/2017)

கடைசி தொடர்பு:20:17 (30/07/2017)

கொரியா தீபகற்பம் மீது பறந்த போர் விமானங்கள்: எச்சரிக்கை விடுக்கிறதா அமெரிக்கா..?

சர்வதேச நாடுகளின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு வந்த வடகொரியாவுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மேல் பறந்தன.

போர் விமானங்கள்

Representative image

அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்தது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை அமெரிக்காவை நோக்கி சோதித்துள்ளது வடகொரியா. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தன. B-1B ரக போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தது ஒரு எச்சரிக்கையாகவே உள்ளது.