வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (31/07/2017)

கடைசி தொடர்பு:17:27 (31/07/2017)

சாலையில் மொபைல் போன் பயன்பாட்டுக்குத் தடைவிதித்த அமெரிக்க நகரம்!

மொபைல் போன்

மெரிக்காவிலுள்ள ஹவாய் மாகாணத்தின் ஹொனொலுலு நகரில், சாலையில்  நடக்கும்போது அலைபேசி பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடையை  மீறி  அலைபேசி பயன்படுத்துவோருக்கு,  15 முதல் 35 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, வரும் அக்டோபர் மாதம்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

இதுகுறித்து  ஹொனொலுலு நகர மேயர் கிர்க் கல்ட்வெல் கூறுகையில், “சாலையில் நடந்து செல்பவர்கள்  அலைபேசி பயன்படுத்துவதால், விபத்துகள் ஏற்படுகின்றன.  குறிப்பாக, இந்த விபத்துகளில் பெரும்பாலும் காயமடைவது முதியவர்களே! இது அமெரிக்காவில் வேறு  எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு, இந்த நகரத்தில் நடக்கிறது” என்று தெரிவித்தார். 

அவசர சேவைக்காக  அலைபேசி பயன்படுத்துவோர் மட்டும் இந்த தடையிலிருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம். 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சாலையில் அலைபேசி  பயன்படுத்திக்கொண்டே நடந்துசென்ற காரணத்தால், 11,000 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், நடைபாதையில் செல்லும்போது மொபைல் போன்  பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது தனி மனித உரிமையைப் பறிப்பதாக உள்ளது என அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஆனால், லண்டன், ஜெர்மனி போன்ற  நாடுகளிலும் நடைபாதையில் நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு எதிராக  பல நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க