Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நம்புவீர்களா... விமானம்தான் இந்த அமெரிக்கரின் வீடு..!

ஒரு விமானத்தின் உட்புறத்தை ஒரு நிமிடம் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். அங்கிருக்கும் அனைத்து சீட்களையும் அப்படியே மறையச் செய்யுங்கள். இப்போது , அது காலியான ஓர் இடமாக இருக்கிறது. அந்தக் காலி இடத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்குப் பிடித்த பொருள்களை, பிடித்த இடங்களில் வைத்து நிரப்புங்கள். இன்னும், இன்னும் உங்களுக்குப் பிடித்த மாதிரியாக அதன் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மாற்றுங்கள். இனி இந்த விமானம்தான் உங்கள் வீடு எனும் கற்பனை, உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வைக் கொடுக்கிறது ? இது கற்பனையில் மட்டும்தான் சாத்தியம் என்கிறீர்களா ? இல்லை... நிஜத்திலும் இது சாத்தியம் தான். ப்ரூஸ் கேம்ப்பெல் (Bruce Campbell) கதையைக் கொஞ்சம் கேளுங்கள்...

விமானம் தான் இவரின் வீடு - அமெரிக்கா

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஓரகன் பகுதியில் வசித்து வருகிறார்  67 வயதான ப்ரூஸ். அவர் வசிப்பது போயிங் - 727 ( Boeing - 727 ) விமானத்தில். மரங்கள் சூழ்ந்த ஒரு காட்டின் நடுவே , பிரமாண்டமாய் நின்று கொண்டிருக்கிறது அந்தப் பெரிய விமானம். விமானம் நேரடியாகத் தரையில் உட்காராமல், சில மரக்கட்டைகளின் மீது மிதந்துக்கொண்டிருக்கிறது. ஒரு பட்டன் அழுத்தினால், அந்தப் படிக்கட்டுகள் மெதுவாக இறங்குகின்றன. அதன் படியின் ஓரத்தில் எல்.ஈ.டி. பல்புகள் எரிந்து, ஜொலிக்கின்றன. அப்படியே மெதுவாக அதில் ஏறினால், முதலில் அந்த இறக்கைகள் கண்களில் படுகின்றன. இரும்பு இறக்கைகள் முழுவதையும் மரத்தின் இலைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. 

விமானம் தான் இவரின் வீடு - அமெரிக்கா

அந்தப் படிகளில் ஏறி உள்ளே சென்றால், அது அத்தனை  அழகான வீடாகக் காட்சியளிக்கிறது. "காக்பிட்" எனச் சொல்லப்படும் பைலட்டின் அறை, ப்ரூஸின் புத்தக அறையாக மாறியிருக்கிறது. இரண்டில் ஒரு கழிவறை சில, பல மாறுதல்களோடு குளியலறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இப்படியாக, ஒவ்வொர் இடத்தையும் தனக்குப் பிடித்தமாதிரி மாற்றியுள்ளார். ப்ரூஸ் ஒரு எலக்ட்ரிகல் இன்ஜினீயர்.

விமானம் தான் இவரின் வீடு - அமெரிக்கா

இன்று எதையும் தயாரிக்க முடியும் என்ற இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், தயாரிப்புகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், அதிகப்படியாக தயாரிக்கப்படும் பொருள்களை அதன் பயன்பாட்டிற்குப் பின்னர் என்ன செய்வதென்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது. இந்தக் கேள்வி இயற்கைச் சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. இதெற்கெல்லாம் ஒரே வழி, பொருள்களை மறு சுழற்சி செய்து, மறு உபயோகப்படுத்துவது என்பதுதான் என்று நினைத்திருக்கிறார் புரூஸ். அதுவும், இவ்வளவு பெரிய ஏரோபிளேனை ஒரு கட்டத்திற்குப் பிறகு என்ன செய்வார்கள் என்ற கேள்வி அவருக்கு எழவே அதற்கான பதிலைத் தேடினார். மிகப் பெரிய ஆளுமையோடு தெரியும் விமானம், ஒருகட்டத்திற்குப் பிறகு வெறுமென பழைய இரும்புப் பொருளாக மட்டுமே பார்க்கப்படுவது ஏனோ அவருக்கு மனம் ஒப்பவில்லை. அந்த விமானங்களில் உயிர் இருப்பதாக அவர் உணர்ந்தார். 

விமானம் தான் இவரின் வீடு - அமெரிக்கா

உடைப்பதற்குத் தயாராக இருந்த ஒரு விமானத்தை வாங்கி, அதை தனக்கேற்ற வீடாக மாற்றிக்கொண்டார்.  வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே அவர் இந்த விமானத்தில் தங்குகிறார். மற்ற ஆறு மாதம், இவர் ஜப்பானில் வசிக்கிறார். இந்த விமானத்தில் கொஞ்சம், கொஞ்சமாக கடந்த 10 வருடங்களாகப் பலவித மாற்றங்களைச் செய்திருக்கிறார். இது இன்னும் முழுமையாகவில்லை. இன்னும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றும் சொல்கிறார். மேலும், அடுத்து ஜப்பானிலும் ஒரு பழைய விமானத்தை வாங்கி , அதைத் தனக்கான வீடாக மாற்றியமைக்க இருப்பதாக ப்ரூஸ் தெரிவித்துள்ளார். இந்த விமான வீட்டிற்கு இதுவரை மொத்தமாக 65 லட்சம் ரூபாய் வரை இவர் செலவு செய்திருக்கிறார்.

விமானம் தான் இவரின் வீடு - அமெரிக்கா

இங்கிருக்கும் ஒவ்வொருவருக்குமே தங்களுக்குப் பிடித்த மாதிரியான வாழ்வை வாழத்தான் ஆசை. ஆனால், ஏனோ பல்வேறு சூழல்களினால் , பல காரணங்களினால் அதை நோக்கி நாம் செல்வதில்லை. ஆனால், தனக்குப் பிடித்த வாழ்வை, தனக்குப் பிடித்த மாதிரியே வாழும் ப்ரூஸ் போன்றவர்கள் உண்மையிலேயே ஆச்சர்யமானவர்கள்தான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close