'வட கொரியாவைவிட்டு அமெரிக்க குடிமக்கள் அனைவரும் வெளியேறுங்கள்..!'- ட்ரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை | The United States has urged Americans currently in North Korea to leave the country

வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (03/08/2017)

கடைசி தொடர்பு:20:09 (03/08/2017)

'வட கொரியாவைவிட்டு அமெரிக்க குடிமக்கள் அனைவரும் வெளியேறுங்கள்..!'- ட்ரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை

அமெரிக்கா - வட கொரியா இடையே பிரச்னை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், 'வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதிக்கு முன்னர் வட கொரியாவை விட்டு அமெரிக்க குடிமக்கள் அனைவரும் வெளியேறுங்கள்' என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, 'வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் வட கொரியாவில் பயணம் செய்யவே, வட கொரியாவுக்கு பயணம் செய்யவோ, வட கொரியா வழியாக பயணம் செய்யவோ அமெரிக்க குடிமக்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. இந்தத் தடையைத் தாண்டியும் அமெரிக்க குடிமகன் யாராவது வட கொரியாவுக்கு பயணம் செய்ய விரும்பினால், சிறப்பு அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும்' என்று தெரிவித்துள்ளது. 

இந்த சிறப்பு அனுமதி, பத்திரிகையாளர்கள், ரெட் க்ராஸில் இருப்பவர்கள் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது. வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அணு ஆயுத ஏவுகணைகளைத் தொடர்ந்து சோதனை செய்துகொண்டிருந்ததை அடுத்து அமெரிக்கா, 'இனி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை' என்று சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தது.