இம்ரான் கான் மீது நாடாளுமன்றக் குழு விசாரணை..!

பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கான் மீது நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 


பாகிஸ்தானின் எதிர்கட்சித் தலைவராக இம்ரான் கான் இருந்துவருகிறார். அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவர். அவர் மீது அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி ஆயிஷா குலாலை என்பவர் பாலியல் புகார் தெரிவித்தார். இம்ரான் கான், தனக்கு பாலியல்ரீதியான குறுஞ்செய்திகள் அனுப்பி, தன்னைத் தொந்தரவுசெய்வதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம், பாகிஸ்தான் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பாகிஸ்தானின் பிரதமராகப் பொறுப்பேற்ற ஷாஹித் கஹான் அப்பாஸி தலைமையிலான  அமைச்சரவைக் கூட்டத்தில், இம்ரான் கான் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் குழுமூலம் விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆயிஷா குலாலையின் குற்றச்சாட்டை இம்ரான் மறுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது எதிர்கட்சித் தலைவருக்கும் நெருக்ககடி ஏற்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!