வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (07/08/2017)

கடைசி தொடர்பு:16:35 (07/08/2017)

ஜப்பானை நெருங்கும் முன்னரே நொறுக்கித் தள்ளும் ‘நொரு’ புயல்!

ஜப்பான் நாட்டை ‘நொரு’ புயல் நெருங்கி வருவதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல்

ஜப்பான் நாட்டின் தென்மேற்குப் பகுதியை நோக்கி ‘நொரு’ என்ற புயல் முன்னேறி வருகிறது. இதுவரையில் புயல் ஜப்பானை முழுவதுமாக தாக்காத நிலையிலேயே ஜப்பான் நாட்டில் நிலச்சரிவு, வெள்ளம், மழை என ‘நொரு’ நெறுங்கும் முன்னரே அதன் தாக்கமும் தாக்குதலும் அதிகரித்தே காணப்படுகிறது. ‘நொரு’ புயல் நெருங்கி வருகையில் அது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் ஜப்பானைத் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜப்பானின் குயசு தீவுக்கு அருகில் மையம் கொண்டுள்ள நொரு, நேற்று யகுஷிமா நகரைப் பலமாகத் தாக்கியதில் ஒருவர் பலியானார். இதேபோல், தானேகாஷிமா தீவிலும் ஒருவர் இந்தச் சூறாவளி புயலுக்குப் பலியாகியுள்ளார். இன்று, ஜப்பானின் ஷிகோகு தீவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘நொரு’ இன்று ஷிகோகுவை தாக்கிய பின்னர், கொஞ்சம் நகர்ந்து ஜப்பானைத் தாக்கிய பின்னர் வலுவிழக்கும் என எதிர்பார்ப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.