வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (10/08/2017)

கடைசி தொடர்பு:09:59 (10/08/2017)

கத்தார் செல்வதற்கு இனிமேல் விசா தேவையில்லை..!

'இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், இனி விசா இல்லாமல் கத்தார் நாட்டுக்கு வரலாம்' என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 


வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரின் மீது மற்ற வளைகுடா நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. அந்த பாதிப்பைத் தவிர்ப்பதற்காக, கத்தார் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 'இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கத்தாருக்கு வருவதற்கு விசா தேவையில்லை' என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், இந்தியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, லெபனான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.

கத்தாருக்குச் செல்பவர்களின் குடியுரிமையைப் பொறுத்து, அந்நாட்டு அரசு விசா சலுகைகளை வழங்கியுள்ளது. குடியுரிமையைப் பொறுத்து 180 நாள்கள், 90 நாள்கள், 30 நாள்கள் என இலவச விசா வழங்க உள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ளள கத்தார் சுற்றுலா அமைச்சகம், ''80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வருவதற்கு இலவச விசா வழங்கப்படுகிறது. அவர்கள், கத்தாரின் புகழ்பெற்ற இடங்கள் மற்றும் கலாசாரத்தைக் கண்டு மகிழ வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.