Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமண கோஷ்டியுடன் சிறைச்சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

வங்கதேசத்தில், உயர் பாதுகாப்பில் இருக்கும் சிறைச்சாலையில், திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. 

சிறைச்சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்


காஷிம்பூர் மத்தியச் சிறைச்சாலையில், தவறுதலாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தினர். சிறைச்சாலைமீது தாக்குதல்நடத்தி, கைதிகளை விடுவிக்கத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஹெலிகாப்டர் சிறை வளாகத்தினுள் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாகப் பேசிய வங்கதேச சிறைத்துறை ஐ.ஜி. பிரிகேடியர் ஜெனரல் சையது இஃப்திகார், ''உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், சிறையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், சிறை வளாக மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. ஹெலிகாப்டரை போலீஸார் உடனடியாக சுற்றிவளைத்தனர். தவறுதலாக சிறை வளாகத்தில் தரையிறங்கியதை உணர்ந்த விமானி, பயணிகள் இறங்கியவுடன் ஹெலிகாப்டருடன் பறந்துசென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். விமானி, ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்த ஹெலிகாப்டர் வாடகை நிறுவனம் வங்கதேச அரசிடம் மன்னிப்புக் கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவிலிருந்து திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் ஹெலிகாப்டரில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வந்த போதே, அந்த ஹெலிகாப்டர் தவறுதலாக சிறை வளாகத்தில் தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement