Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அணிக்கு தலைமைதாங்கி இந்தியா வருகிறார் இவான்கா ட்ரம்ப்!

இந்தியாவில் நடக்கவிருக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க அணிக்கு தலைமையேற்று இந்தியா வரவிருக்கிறார் இவான்கா ட்ரம்ப்.

இவான்கா ட்ரம்ப்


மத்திய நிதி ஆயோக் அமைச்சகத்துடன் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இணைந்து ’உலக தொழில்முனைவோர் மாநாடு’ நடத்தவுள்ளது. ஐதராபாத்தில் வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக அளவில் பல சர்வதேச தலைவர்களும், முன்னணி தொழில் முனைவோர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

சர்வதேச அளவில் பல புதிய தொழில் வாய்ப்புகளை ஈர்ப்பதற்காக ஒருங்கிணைக்கப்படும் இந்த தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று ஐதராபாத் வரவுள்ளது. இந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமையேற்று இந்தியா வரவுள்ளார் இவான்கா ட்ரம்ப். டொனால்டு ட்ரம்ப்பின் மகளான இவான்கா சர்வதேச அளவில் நடைபெறும் பல வளர்ச்சி மாநாடுகளிலும், உலகத் தலைவர்கள் பங்கேற்கும் பல நிகழ்வுகளிலும் தன்னுடைய தொடர் பங்களிப்பை அளித்து வருகிறார்.

பெண் தொழில் முனைவோருக்கான பிரதிநிதியாக இவான்கா ட்ரம்ப் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இத்தகவலை வெள்ளை மாளிகையும், இவான்காவின் தந்தையும் அமெரிக்க அதிபருமான டொனால்டு ட்ரம்ப்பும் உறுதிபடுத்தியுள்ளனர். தனது இந்திய வருகை குறித்து இவான்கா கூறுகையில், ‘அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமையேற்று இந்தியா வந்து பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளது மிகவும் பெருமையான விஷயம்’ எனக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement