Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கென்யா அதிபர் தேர்தல்: மீண்டும் அதிபர் ஆனார் உகுரு கென்யட்டா!

கென்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார் உகுரு கென்யட்டா.

உகுரு கென்யட்டா

ஆப்பிரிக்கக் கண்டங்களில் ஒன்றான கென்யா நாட்டில் அதிபராகப் பதவி வகித்து வந்த உகுரு கென்யட்டாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து அந்நாட்டில் புதிய அதிபருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அதிபர் கென்யட்டா மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.

இந்நிலையில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட கென்யட்டா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஒடிங்காவை வென்று மீண்டும் அதிபராகத் தேர்வாகியுள்ளார். அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது கென்யட்டா 54.3 சதவிகிதமும் ஒடிங்கா 44.7 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அதிபர் கென்யட்டாவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒடிங்காவின் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் கலவரமாக உருவான நிலையில் போலீஸார் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். இதில் போராட்டக்காரர்களுள் இருவர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கென்யட்டா மற்றும் ஒடிங்கா இருவரும் அவரவர் ஆதரவாளர்களை அமைதிப்படுத்திய பின்னர் கலவரம் கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement