நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு..! இந்திய சுற்றுலா பயணிகள் 200 பேர் தவிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 700-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர். அதில் 200 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். 


நேபாளத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்வாலன் ராப்தி மற்றும் புதிராப்தி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நேபாளத்தில் சித்துவான் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அந்த மாவட்டத்தின் சவுராஹா பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் நீர் புகுந்துள்ளது.

அதனால் 700-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். அந்தப் பகுதியில் சிக்கியுள்ளவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் ஆவர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 40,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கிழக்கு தேராய் பகுதிகளில் முற்றிலுமாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன், லேண்ட்லைன் இணைப்புகளும் முற்றிலுமாக செயலிழந்துள்ளன. இந்த வெள்ளத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும்
23 பேர் காணாமல்போயுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!