தாய்மார்கள், பச்சிளம் குழந்தையை அதிக நேரம் அணைப்பதும் ஆபத்தா?

தாய்மார்கள்


பொதுவாகவே, குறைப்பிரசவக் குழந்தைகள் முதல் நலமோடு பிறக்கும் குழந்தைகள் வரை தாயின் அரவணைப்பு மிக மிக முக்கியம் எனவும், குழந்தையை எப்போதும் தாயின் நெஞ்சில் சாய்ந்து கதகதப்புடன் இருக்க வேண்டும் எனவும், குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுவர். இப்படிச் செய்யும்போது, குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கிறது. கூடவே, குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் எனவும் கூறிவருகின்றனர்.


சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு ஒன்றில், பிறந்த பச்சிளம் குழந்தையை அதிக நேரம் அணைத்திருப்பதும் ஆபத்துதான் என்கிற ஆய்வை வெளியிட்டுள்ளது. அதன்படி, Ohio-ல் அமைந்துள்ள  Nationwide Children's Hospital நடத்திய ஆய்வின் முடிவில், தாய்மார்கள் அதிக நேரம் பச்சிளம் குழந்தையைத் தங்களோடு வைத்திருப்பதைத் தவிர்ப்பது நல்லது எனக் கூறியிருக்கிறது. இதற்காக, 125 குறைப்பிரசவக் குழந்தையை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தக் குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்தபோது, குறைப்பிரசவக் குழந்தையைத் தனியே வைத்து, அதற்கான சிகிச்சையை அளித்துவரும் நிலையில், தாயும் அடிக்கடி அதிக நேரம் அணைக்கும்போது அந்தக் குழந்தைக்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், இந்த நேரத்தில் குழந்தையை மென்மையாக அணைக்கத் தெரியாமல் பல தாய்மார்கள் இறுக்கமாக அணைக்கும்போது, குழந்தைக்கு உடல்ரீதியான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறது இந்த ஆய்வு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!