கத்தாருக்கு வழிவிட்ட சவுதி அரேபியா!

 

 

தொடரும் பகைமையை மறந்து, கத்தாரின் ஹஜ் பயணிகளுக்காக அதன் எல்லைக் கதவுகளைத் திறந்துவிட உள்ளது சவுதி அரேபியா.

haj

தீவிரவாதத்துக்குத் துணைபுரிவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது கத்தார். சவுதி, பக்ரைன், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்தன. வான் வழியிலும் கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிட்டது.

இதனால், கத்தாருக்கும் சவுதி அரேபியாவுக்குமான உறவு முற்றிலும் முறிந்த நிலையில், தற்போது சவுதி அரேபியா தன் எல்லைக் கதவுகளை கத்தாரின் கஜ் பயணிக்களுக்காகத் திறந்துவிட முடிவுசெய்துள்ளது. சவுது அரேபியாவில் உள்ள மெக்கா புனித தலத்திற்கு கத்தாரிலிருந்து ஹஜ் யாத்ரீகர்கள் அதிகளவில் வருவதுண்டு. இந்த ஆண்டும் கத்தார் யாத்ரீகர்கள் பயணத்துக்கு ஒருவித சந்தேகத்துடனே தயாராகி வந்தனர். சவுதி அரேபியாவுடனான உறவு இக்கட்டான நிலையில் உள்ளபோது, யாத்திரைகுறித்த சந்தேகம் நிலவிவந்தது. இந்நிலையில், கத்தாரின் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சவுதி தன் எல்லைக் கதவுகளைத் திறக்க முடிவுசெய்திருப்பது வரவேற்புக்குரியதாக கத்தார் யாத்ரீகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!