குளோபல் வார்மிங் ஆராய்ச்சியார்கள் பட்டாம்பூச்சிகளை விரும்புவது ஏன்? | Why do global warming researchers love butterflies

வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (21/08/2017)

கடைசி தொடர்பு:19:07 (21/08/2017)

குளோபல் வார்மிங் ஆராய்ச்சியார்கள் பட்டாம்பூச்சிகளை விரும்புவது ஏன்?

பட்டாம்பூச்சிகளை

‘பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே!’ என்றும் ‘பற பற பற பற பட்டாம்பூச்சி’ என்றும் திரைப்படப் பாடல்களில் வரும் பட்டாம்பூச்சிகளை தான் நாம் தினமும் சந்திக்கிறோமே தவிர, நிஜ வாழ்வில் பட்டாம்பூச்சிகளை பார்க்கவே முடிவதில்லை. 

பூச்சிகளில் சூப்பர்ஸ்டார் என்றாக் அது பட்டாம்பூச்சி தான். அழகான இனமும் கூட. இந்த இனம் அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் ஊடுருவி இருக்கிறது. விஞ்ஞானிகளின் விருப்பப் பட்டியலில் இந்த பட்டாம்பூச்சி இனமும் ஒன்றாம். காரணம், புவி வெப்பமயமாதலின் (Global warming) தாக்கத்தை உணரவும் அளவீடு செய்யவும் பட்டாம்பூச்சிகள் உதவும் என்பதுதான். அவை ஒரு Pikilothermic. அதாவது, அதன் உடல் வெப்பநிலை மாறிக்கொண்டேயிருக்கும். அதன் தினசரி செயல்பாடுகள் வெப்பம், குளிர், மழை, காலமாற்றம் சார்ந்த படிப்புகளுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும். 

உலகளாவிய மற்றும் பிராந்திய வெப்பமயத்தால் பட்டாம்பூச்சிகளின் வளமானது அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு முறை அது வசித்த சூழலுக்கு எதிரான இடத்தை நோக்கி அது நகரும். ஓரிடத்தில் ஒரு முறை மட்டுமே வசிக்கும். 

 பட்டாம்பூச்சியின் வகைகள் சில:

புல்வெளி பட்டாம்பூச்சிகள்(grassland butterflies) : 
இவை பொதுவாக புல்வெளிகள் மற்றும் பூந்தோட்டங்களில் காணப்படும். பிரகாசமான நிறத்தில் இருக்கும். எப்போதும் பூக்களின் மீது அமர்ந்திருக்கும்.

வனப்பகுதி பட்டாம்பூச்சிகள்(Woodland butterflies) :
குறைந்த வண்ணங்களுடனும் இருக்கும்.  மற்றதைவகைகளை விட நிறைய வகையிலான வாழ்விடங்களில் இவற்றைக் காணலாம். 

மலை பட்டாம்பூச்சிகள்(Mountain butterflies) :
இந்த வகை பூச்சிகளுக்கு லேசான கோடையும் குளிர் இரவுகளும் விரோதமான சுற்றுப்புறத்தையே அளிக்கும். இதற்காகவே இதில் பல்வேறு வகைமைகள் உண்டு.  

வெப்பமண்டல பட்டாம்பூச்சிகள்:
மிகவும் அற்புதமான பட்டாம்பூச்சிகள் எல்லாம் பெரும்பாலும் வெப்ப மண்டலத்திலிருந்தே வரும். பிங்க், கரும் பச்சை, ஊதா ஆகிய நிறங்களிலேயே காட்சி தரும். 

butterfly

                 
பட்டாம்பூச்சிகள் குறைந்து வருவதேன் ? 

புவி வெப்பமயமானால் அது பூக்களை விரைவில் மலரச் செய்யும். பட்டாம்பூச்சிகளுக்கும் அது பரவும். அதுதான் இங்கு பிரச்சனையே. ஆனால் பட்டாம்பூச்சிகளுக்கும் அதன் புரவலன் தாவரங்களுக்கும்(host plants) இடையே இருப்பது ஒரு வித்தியாசமான தொடர்பு. அந்த புரவலன் தாவரங்கள் தான் பட்டாம்பூச்சிகளுக்கு உணவுகளையும் முட்டையிடுவதற்கான இடத்தையும் அமைத்துக் கொடுக்கும். கைம்மாறாக, பட்டாம்பூச்சிகள் அவற்றுக்கான மகரந்தத்தை அளிக்கும். ஆகையால் விரைவில் மலர்கள் மலர்ந்துவிட்டால் பட்டாம்பூச்சிகள் வந்துவிடும். அப்பொழுது பட்டாம்பூச்சிகள் உணவு உட்கொள்ள இயலாது; மலர்களும் மகரந்தத்தைப் பெறாது.  
இந்த மாதிரியான பிரச்சனைகள் புரவலன் தாவரங்களுக்கும் உண்டு. பூச்சிகளுக்கு தாவரங்கள் இருப்பது போல, அந்த புரவலன் தாவரங்களுக்கும் மகரந்த பரப்பிகள்(pollinators) உண்டு. இல்லாத சமயத்தில் தாவரங்கள் தன்னையே மகரந்த பரப்பியாகவும் உருவகித்துக் கொள்ளும் . 

ஒரு  குறிப்பிட்ட இன பட்டாம்பூச்சிகள் மற்ற விருப்பமற்ற தாவரங்களைப் பயன்படுத்தி வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்து கொள்கிறது. இதனால் பட்டாம்பூச்சிகளின் உற்பத்தி வெகுவாகக் குறைகிறது. 

கண்ணுக்குத் தெரியாத அளவு அழிவுக்கு உட்படுகின்ற பட்டாம்பூச்சி இனத்தை மீட்க நாம் செய்ய வேண்டியவை நிறைய. பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் எந்தச் செயல்களையும் செய்யாமல் இருக்கலாம். ப்ளாஸ்டிக் போன்ற சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்க்கலாம். அழிவது பட்டாம்பூச்சிகள்தானே என நினைக்க முடியாது. அதன் அழிவு நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்: இந்த உலகம் உயிர்வாழ தகுதியற்ற இடமாக மாறி வருகிறது.


 


டிரெண்டிங் @ விகடன்