ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றார் மலாலா!

உலகின் முன்னணிப் பலகலைக்கழகமான ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா கல்வி பயில உள்ளார்.

மலாலா

பாகிஸ்தானில், பெண்கள் உரிமைக்காகப் போராடி வந்த மலாலாவின் செயல்களினால் ஆத்திரம் அடைந்தனர் தலிபான் தீவிரவாதிகள். கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ம் தேதி, அவர் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது,  தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

தீவிரவாதிகளின் கொலை முயற்சியில், மலாலா மரணத்தின் விளிம்பு வரை சென்று, பின்னர் லண்டனில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் அங்கு, பர்மிங்ஹாமில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தொடர்ந்து பெண் கல்விக்காகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இவருக்குக் கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் தனது பள்ளிக்கல்வியை நிறைவு செய்த மலாலா, தன் பெருநாள் கனவான ஆக்ஸ்ஃபோர்டு கனவை நிறைவேற்றியுள்ளார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்பதை தன் குறிக்கோளாகக் கொண்டு முயற்சித்து வந்து மலாலாவுக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில இடம் கிடைத்துள்ளது. மலாலா பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரத் துறையைத் தேர்வு செய்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!