Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சைல்ட் ஜீனியஸ்' பட்டத்தை வென்ற இந்திய வம்சாவளிச் சிறுவன்!

சைல்ட் ஜீனியஸ்

(Source: Channel 4 via twitter)

பிரிட்டனின் பிரபல தொலைக்காட்சி 'சேனல்-4' நடத்திய பொது அறிவுப்போட்டியில், இந்திய வம்சாவளியான ராகுல் தோஷி வெற்றிபெற்று, 'சைல்ட் ஜீனியஸ் (Child Genius)' என்ற பட்டத்தை வென்றார்.

கடந்த சில நாள்களாக சிறுவர்களுக்கான 'Child Genius' என்ற பட்டத்துக்கான பொது அறிவுப்போட்டியை பிரிட்டனின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 'சேனல்-4' நடத்தி வந்தது. இதில் 12 வயதுக்கு உட்பட்ட 20 போட்டியாளர்கள் பங்குகொண்டனர். இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில், பிரிட்டனைச் சேர்ந்த ரோனன்(9) என்ற சிறுவனும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகுல் தோஷி (12) என்ற சிறுவனும் மோதினர். போட்டியில் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்து, 10-4 என்ற புள்ளிகள் கணக்கில் ராகுல் தோஷி வெற்றிபெற்று 'சைல்ட் ஜீனியஸ்' பட்டத்தை வென்றார்.

போட்டியில், 18-வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மருத்துவமுறைகள், கண்டுபிடிப்புகள் தொடர்பான கேள்விகளுக்கு ராகுல் தோஷி அளித்த பதில், அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. மேலும், இறுதிச்சுற்றுப் போட்டியில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வில்லியம் ஹோல்மேன் ஹன்ட் மற்றும் எவரெட் மிலய்ஸ் போன்றவர்கள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்ததால், 'சேனல்-4' தொலைக்காட்சி நிறுவனம் இந்திய வம்சாவளியான ராகுல் தோஷிக்கு 'சைல்ட் ஜீனியஸ்' பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement