வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (21/08/2017)

கடைசி தொடர்பு:11:20 (21/08/2017)

அமெரிக்கா- தென்கொரியா கூட்டுப் போர் பயிற்சி: வடகொரியா கண்டனம்!

கொரிய தீபகற்பப் பகுதியில், அமெரிக்காவுடன் தென்கொரியா இணைந்து நடத்தவிருக்கும் கூட்டுப் போர் பயிற்சிக்கு, வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

போர் [பயிற்சி


வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 60 ஆண்டுகாலமாக பிரச்னை இருந்துவருகிறது. அமெரிக்காவின் ஆதரவில், வடகொரியா மீது தென்கொரியா நடத்திய சண்டை, 1953-ல் முடித்துவைக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த சில வாரங்களாக அமெரிக்கா- வடகொரியா இடையே மீண்டும் போர்ப் பதற்றம் தலைதூக்கியுள்ளது. 


சமீபத்தில், அமெரிக்காவின் குவாம் தீவை ஏவுகணைமூலம் தாக்க வடகொரியா திட்டமிட்டபோது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனடி எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து வடகொரியா,  அமெரிக்காவின் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாகக் கவனிக்கும்பொருட்டு தன் தாக்குதல் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து கூட்டுப் போர் பயிற்சியைத் தொடர்ந்து 10 நாள்கள் நடத்த உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த வடகொரியா, இந்தக் கூட்டுப் பயிற்சிக்கு எதிரான தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

அடுத்த உலகப் போரானது நடந்தால், அது ஆசியக் கண்டத்திலேயே இருக்கும் என்று சில பத்தாண்டுகளாகக் கூறப்பட்டுவருவதை, கொரியப் போர் விவகாரம் தற்போது மெய்ப்பித்துவிடுமோ எனும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.