Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’இந்தியாதான் காரணம்!’: சாடும் சீனா!

இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீரின் லடாக் பகுதியில், ’இந்தியா- சீனா இடையே நடந்த கைகலப்புக்குக் காரணம், இந்தியாதான்’ என சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தியா- சீன எல்லை

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குகுழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து, இந்திய-சீன எல்லைப் பகுதியான காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவம் ஊடுருவ முயன்றுள்ளது. அப்போது, தடுத்த இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியதில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு, முதன்முறையாக இந்தியா அதிகாரபூர்வ கண்டனங்களை சீனாவுக்கு எதிராகத் தெரிவித்தது. அந்தச் சமயத்தில், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தவொரு தகவலும் வரவில்லை எனக் கூறிய சீன வெளியுறவுத்துறை, ‘எல்லையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியாதான் காரணம்’ எனக் குற்றம் சுமத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement