Published:Updated:

கருக்கலைப்பு சட்டம்: அமெரிக்கா - இந்தியா ஓர் ஒப்பீடு!

Abortion Law (Representational Image) ( Pexels )

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் பாதி மாகாணங்கள் கருக்கலைப்புக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இனி ஒரு பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள, கருக்கலைப்பை ஆதரிக்கும் மாகாணத்துக்கு நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கருக்கலைப்பு சட்டம்: அமெரிக்கா - இந்தியா ஓர் ஒப்பீடு!

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் பாதி மாகாணங்கள் கருக்கலைப்புக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இனி ஒரு பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள, கருக்கலைப்பை ஆதரிக்கும் மாகாணத்துக்கு நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Published:Updated:
Abortion Law (Representational Image) ( Pexels )

அமெரிக்காவில் அந்நாட்டுப் பெண்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய கருக்கலைப்பு உரிமையை தடை செய்யுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கருக்கலைப்பை வரைமுறைக்குட்பட்டு அனுமதிக்கவும் தடை செய்யவும், அந்நாட்டு மாகாணங்களை ஆளும் அரசாங்கங்களுக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

Foetus (Representational Image)
Foetus (Representational Image)

அமெரிக்காவில் இதுவரை பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வது உரிமையாகக் கருதப்பட்டு வந்த சூழ்நிலையில் அந்த உரிமை திடீரென ஒரு தீர்ப்பின் மூலம் பறிக்கப் பட்டுள்ளதைக் கண்டு பலரும் போராட்டம் நிகழ்த்தி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி, இந்தத் தீர்ப்பானது நாட்டை 150 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்று கடிந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்காவின் மாகாணங்கள் இனி கருக்கலைப்பு செய்வதைத் தடை செய்யலாம். கருக்கலைப்பு செய்தவர்களைத் தண்டிக்கலாம். மிசௌரி மாகாண அரசு, அவர்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் மருத்துவ அவசர காரணங்களுக்காக அன்றி கருக்கலைப்பு செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்குமாறு சட்டம் வகுத்து வைத்துள்ளது.

சிசு (சித்திரிப்பு படம்)
சிசு (சித்திரிப்பு படம்)

இவ்வாறாக அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் பாதி மாகாணங்கள் கருக்கலைப்புக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இனி ஒரு பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள, கருக்கலைப்பை ஆதரிக்கும் மாகாணத்துக்கு நெடிய பயணம் மேற்கொண்டு சிரத்தைக்குள்ளாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது பொருளாதார நிலையில் கீழ்த்தட்டில் இருக்கும் பெண்களைக் கடுமையாக பாதிக்கும் முடிவாக அமையலாம்.

இந்நிலையில் இந்தியாவில் கருக்கலைப்பை வரைமுறைக்குட்படுத்தும் சட்டங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

US Law (Representaional Image)
US Law (Representaional Image)

இந்தியாவில் இந்திய குற்றவியல் சட்டம் ஐபிசி 312-ன் படி, ஒரு பெண்ணின் உயிரைக் காக்கும் நோக்கில் அன்றி செய்யப்படும் கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாகும். இதுகுறித்து 1971-ம் ஆண்டு கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தை இந்திய அரசு வரைந்தது. அச்சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் மருத்துவக் காரணங்களுக்காகக் கருக்கலைப்பு செய்யலாம். ஆயினும், ஒரு பெண் தனக்கு கருக்கலைப்பு செய்துகொள்ள வரம்பு மீறிய அதிகாரம் வழங்கப்பட வில்லை. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரையின்றி ஒரு பெண்ணால் கருக்கலைப்பு செய்துகொள்ள இயலாது.

இவ்வாறாக இருந்த சட்டத்தில் 2002-ம் ஆண்டு ஒரு சீர்திருத்தம் சேர்க்கப்பட்டது. அதன்படி, அறுவைசிகிச்சையின்றி கருக்கலைப்புக்கு உதவும் மாத்திரைகள் மூலமும் கருக்கலைப்பு செய்யலாம் எனும் ஷரத்து அந்தச் சட்டத்தில் இணைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
ட்விட்டர்

பிறகு, சமீபத்தில் 2021-ம் ஆண்டு அந்தச் சட்டத்தில் மீண்டும் சீர்திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டன. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கர்ப்பிணிக்கு 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய இந்தச் சட்டதிருத்தம் வழிவகை செய்தது. பாலியல் வன்முறைகளால் கருவுற்றவர்கள், குடும்பத்தில் உள்ள ரத்த சொந்தங்களால் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டு கருவுற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யும் காலத்தை இந்தச் சீர்திருத்தம் நீட்டியது. மேலும், வல்லுநர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில், கருப்பைக்குள் இருக்கும் சிசு பிறவிக்வ்குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டால் கர்ப்பத்தின் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் கருக்கலைப்பு செய்துகொள்ள ஏதுவாக சட்டம் திருத்தப்பட்டது.

பாதுகாப்பான கருக்கலைப்பை பெண்களுக்கு எளிதாகவும், அவர்கள் இருக்கும் இடங்களிலேயே கிடைக்கச் செய்யவும் இந்தச் சட்டம் துணை நிற்கிறது. ஆயினும், ஒரு பெண்ணோ, அவரின் துணையோ மருத்துவரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு செய்துகொள்வதை இந்திய சட்டம் தடை செய்கிறது.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

ஆனால், பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் உச்சத்தில் இருக்கும் வல்லரசான அமெரிக்காவில் பெண்களின் அடிப்படை உரிமையான, பாதுகாப்பான கருக்கலைப்புக்கு இந்த 21-ம் நூற்றாண்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சிக்குரியது. அதுவே, நமது நாட்டில் பாதுகாப்பான கருத்தடையை பாரபட்சமின்றி பெண்கள் பெற ஏதுவாக சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது, நம் நாடும், அரசும் சட்டமும் பெண்களின் பாதுகாப்பில் கொண்டுள்ள அக்கறைக்கு சான்றாகிறது.