Published:Updated:

`அமேசானில் வழிதவறிய தாய், குழந்தைகள்!' -திகில் அனுபவத்தைக் கொடுத்த 34 நாள்கள்

குழந்தைகள்
குழந்தைகள் ( El tiempo )

பனை மரத்தின் இலைகளைப் பயன்படுத்தி கட்டுமரம் ஒன்றை தன்னுடைய குழந்தைகள் கட்டத் தொடங்கியதை நினைவு கூர்ந்தார், மரியா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொலம்பியாவில் உள்ள புவேர்ட்டோ லெகுசாமோ எனும் பகுதியைச் சேர்ந்தவர், மரியா ஒலிவா பெரெஸ். குழந்தைகள் விடுமுறை நாள்களில் இருப்பதால், தனது கணவரின் பண்ணைக்குக் கடந்த டிசம்பர் 19-ம் தேதி தனது மூன்று குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

பண்ணையிலிருந்து வீட்டுக்கு அமேசான் பாதையின் வழியாகத் திரும்பி வரும்போது இருட்டத் தொடங்கியுள்ளது. இதனால், நான்குபேரும் காட்டுக்குள் வழி தவறிச் சென்றுள்ளனர். சுமார் ஒரு மாதங்களுக்குப் பிறகு காட்டிலுள்ள ஆற்றுக்கு மீன்பிடிக்க வந்த மீனவர் ஒருவரின் உதவியால் மீட்கப்பட்டுள்ளனர்.

மரியா
மரியா
El tiempo

காட்டில் கழித்த நாள்களைக் குறித்து மரியா பேசுகையில், ``அடுத்தநாள் காலையில் வழியைக் கண்டு பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மரத்துக்குக் கீழே தங்கியிருந்தோம். எனினும் எங்களால் சரியான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல் ஐந்து நாள்கள் தண்ணீரைத் தவிர வேறு உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருந்தோம். பின்னர், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சிறு குட்டைகளில் கிடைக்கும் மீன்களைப் பிடித்து பச்சையாகச் சாப்பிட்டோம். காட்டில் கிடைக்கும் பழங்கள் விஷமாக இருக்கக்கூடும். எனினும், கிடைப்பதை உண்பதால் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதையும் உணவாக எடுத்துக்கொண்டோம்.

அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் அருந்தினோம். இல்லையென்றால் மயக்கமடையும் நிலை ஏற்படும். தொடர்ந்து எங்களால் நடக்கவும் முடியவில்லை.

`செங்குத்தான பாறை... 820 அடி உயரம்! - 8 மணிநேரமாகப் போராடிய ஸ்கை டைவிங் வீரரின் `திகில்' அனுபவம்

எங்களுடைய அழுகைக் குரலைக் கேட்டு யாரேனும் உதவி செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து காட்டுக்குள் வழியைத் தேடி புட்டுமயோ ஆற்றின் கரைகளில் நடந்துகொண்டே இருந்தோம்" என்றார் கலங்கிய கண்களுடன்.

அமேசான் காடு பல நாடுகளிலும் பரந்து விரிந்துள்ளது. ஒரு கட்டத்தில் வழி தேடி அலைந்த தாயும் குழந்தைகளும் பெரு நாட்டின் அமேசான் எல்லைக்குள் நுழைந்துள்ளனர். நாள்கள், வாரங்களாக மாறத் தொடங்கின.

மரியா தனது குழந்தைகளிடம், ``அமைதியாக இருங்கள். கடவுள், நம்மைப் பார்த்துக்கொள்வார்" என்று கூறி நம்பிக்கையை விதைத்துள்ளார். இந்த நிலையில், மரியாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் `மரியா மற்றும் குழந்தைகளைக் காணவில்லை' எனப் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகளும் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளனர்.

குழந்தைகள்
குழந்தைகள்
El tiempo

பனை மரத்தின் இலைகளைப் பயன்படுத்தி கட்டுமரம் ஒன்றை தன்னுடைய குழந்தைகள் கட்டத் தொடங்கியதை நினைவு கூர்ந்தார், மரியா. பின்னர், அவர்களின் உடலில் பலம் இல்லாததால் இந்த முயற்சியை அவர்கள் கைவிட்டனர் என்றார். குழந்தைகள் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டார்கள் என்றும் இந்த நதிக்கரையில் இறந்துவிடுவோம் என்று நினைத்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

வாழ்க்கையை இழுத்துப் பற்றிக்கொண்டிருந்த அவர்களின் கடைசி நம்பிக்கைக்குக் கைகொடுக்கும்விதமாக ஜனவரி 24 பெரு நாட்டின் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் அவர்களைக் கண்டு உதவியுள்ளார்.

மரியா மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். பெரு மற்றும் கொலம்பியா எல்லைப் பகுதியில் இந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, கொலம்பியா ராணுவம் நான்கு பேரையும் மீட்டு வந்தது. உடல் மெலிந்து பரிதாபமான தோற்றத்தில் இருந்த குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

`என்னைக் காப்பாற்றிய ஷீரோ அவள்..!’- காட்டுத் தீக்கு நடுவே ஆஸ்திரேலியப் பெண்ணின் திகில் அனுபவம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு