Published:Updated:

`லண்டனில் பிறந்த குழந்தைக்கு கொரோனா!' -தாய் மற்றும் குழந்தையை தனிமைப்படுத்திய மருத்துவமனை

குழந்தை
குழந்தை

``கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸால் ஆபத்து ஏற்பட குறைந்த அளவிலேயே வாய்ப்பு இருக்கிறது. பாதிப்பு ஏற்பட்டால் சிறிய அறிகுறிகளின் மூலம் தெரிந்துவிடும்"

இங்கிலாந்தில் பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மிகச்சிறிய வயதிலேயே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தையாக இந்த குழந்தை கூறப்படுகிறது.

‘கொரோனா’ வைரஸ்
‘கொரோனா’ வைரஸ்

லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் இந்த குழந்தையின் தாய்க்கு சில நாள்களுக்கு முன் கொரோனா வைரஸ்க்கான அறிகுறி இருந்துள்ளது. இதனால், மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். பரிசோதனை முடிவு அறிக்கையானது குழந்தை பிறந்த பிறகுதான் வந்துள்ளது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து குழந்தைக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கும் தொற்று இருப்பது உறுதியானது. தாயிடமிருந்து கருப்பை வழியாகவோ அல்லது பிறக்கும்போதோ குழந்தைக்கு வைரஸ் பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பெங்களூரு டு டெல்லி விமானம்; ஆக்ராவுக்கு ரயில்! -தப்பிய கூகுள் ஊழியரின் மனைவிக்கு  கொரோனா பாசிட்டிவ்

தாயின் நிலைமையானது குழந்தையின் நிலைமையைவிட கவலைக்குரிய வகையில் இருப்பதால் இருவரும் தனித்தனியே பிரிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயின் தீவிரத்தால் தாய் சிறப்பு மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், ``கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸால் ஆபத்து ஏற்பட குறைந்த அளவிலேயே வாய்ப்பு இருக்கிறது. பாதிப்பு ஏற்பட்டால் சிறிய அறிகுறிகளின் மூலம் தெரிந்துவிடும். மற்ற தொற்று நோய்களைப் போல கொரோனா வைரஸின் இறப்பு விகிதம் எல்லா தரப்பு வயதினருக்கும் சமமாக இல்லை. இந்த வைரஸால் வயதானவர்கள் மட்டுமே அதிகளவில் இறந்துள்ளனர்" என தெரிவித்துள்ளனர்.

குழந்தை
குழந்தை

ஆரோக்கியமாக பிறந்த குழந்தைகளை வைரஸ் தொற்று ஏற்பட்ட தாய்களிடமிருந்து பிரிக்க வேண்டாம் என்றும் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் இங்லாந்திலுள்ள ராயல் மகப்பேறு கல்லூரியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் தாயின் உறவினர்களையும் கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்த அச்சங்கள் மற்ற நாடுகளைப்போல இங்கிலாந்திலும் அதிகளவில் மக்களிடையே ஏற்பட்டுள்ளன. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ரயில் நிலையங்கள், பூங்காக்கள், சாலைகள் என அனைத்தும் காலியாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப் படுத்திக்கொள்ள வேன்டும் என அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார்.

source : The Sun

`கொரோனா வைரஸ் சாதாரண தொற்றல்ல ட்ரம்ப்...' - அமெரிக்காவை அன்றே எச்சரித்த மருத்துவர்கள்!
அடுத்த கட்டுரைக்கு