Published:Updated:

கொரோனா குவாரன்டைனும் உலக மக்களின் சில சேட்டை வீடியோக்களும்! #Viral

குவாரன்டைன் வேளையில் விளையாடும் நபர்
குவாரன்டைன் வேளையில் விளையாடும் நபர்

கொரோனா வைரஸால் அதிகளவில் அச்சம் சமூகத்தில் நிலவும் நிலையில் தனிமையைப் போக்கவும் பொழுதை செலவழிக்கவும் மக்கள் வேடிக்கையான விளையாட்டுகளில் ஈடுபடும் வீடியோக்கள் பலரையும் இதமாக உணரச்செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல நாடுகளில் உள்ள ஆட்சியாளர்களும் மக்களைத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து மக்கள் பலரும் தங்களைத் தனிமைப்படுத்தி வருகின்றனர். தனிமையின்போது ஒவ்வொருவரும் செய்யும் சில வேடிக்கையான விஷயங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் வைரலான சில சுவாரஸ்யமான வீடியோக்களைப் பற்றிய பதிவுதான் இது. கொரோனா தொடர்பான பரபர தகவல்களை தினமும் படித்து வரும் நமக்கு இதுபோன்ற வீடியோக்கள் சற்று ஆறுதல் ரகம்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆப்பிள் விழுவதை வைத்து புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்கும்போது நியூட்டனும் `கிங் லியர்' கவிதையை எழுதும்போது ஷேக்ஸ்பியரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இன்றைய சூழலில் பெரும்பான்மையான மக்களால் பொறுமையாக அமர்ந்து கவிதை எழுதவோ, புதிதான விதிகளைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்போ குறைவு என்றே கூறலாம். ஏனெனில், பெரும்பான்மையான நமது நேரத்தை சமூக வலைதளங்கள் விழுங்கிவிடுகின்றன. எனினும், தனிமையில் இருக்கும் ஜாலியான மனிதர்களின் மூளை எப்படியெல்லாம் சிந்திக்கிறது என்பதைத் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களின் மூலம் நாம் அறியலாம்.

ஜேமி என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `தனிமைப்படுத்தப்பட்ட நாள் 6' என்ற கேப்ஷனுடன் தனது வீட்டின் மாடியிலுள்ள ஜன்னல் அருகே நின்றபடி கையில் கையுறை ஒன்றை அணிந்து அதற்கு கண்களை வைத்து உயிரினமாகக் கருதி சாலையில் செல்லும் வாகனங்களை அது விழுங்குவது போன்ற வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வேடிக்கையான வீடியோவானது 2.28 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

மற்றொரு வீடியோவில் `தனிமைபடுத்தப்பட்ட நாள் 2' என்ற கேப்ஷனுடன் இருவர் தங்களது ஜாக்கெட்டுகளால் தலையை மூடிக்கொண்டு ஒருவரை ஒருவர் தலையணையால் அடித்து விளையாடுகின்றனர். இந்த வீடியோவும் லட்சக்கணக்கான நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

அதேபோல, மாடியில் நின்றபடி அருகில் இருக்கும் வீட்டுக்காரர்கள் டென்னிஸ் விளையாடும் வீடியோ செல்லப்பிராணியை வைத்து விளையாடும் வீடியோக்களும் லட்சக்கணக்கான நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் அதிகளவில் அச்சம் சமூகத்தில் நிலவும் நிலையில் தனிமையைப் போக்கவும் பொழுதை செலவழிக்கவும் மக்கள் இதுபோன்ற வேடிக்கையான விளையாட்டுகளில் ஈடுபடும் வீடியோக்கள் பலரையும் இதமாக உணரச் செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு