Published:Updated:

`டே 1 டு டே 10' - தனிமைபடுத்தப்பட்ட நிலையில் இருக்கும் பெண்ணின் அனுபவ ட்வீட்டுகள்!

கொரோனா

இந்தப் பதிவை லட்சக்கணக்கான மக்கள் லைக் செய்தும் ரி ட்வீட் செய்தும் வருகின்றனர். கொரோனா குறித்த அச்சம் மிகப்பெரிய அளவில் இருக்கும் இந்தச் சமயத்தில் மிகவும் எதார்த்தமான சாதாரண அறிகுறிகளைச் சொல்லும் இந்தப் பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.

`டே 1 டு டே 10' - தனிமைபடுத்தப்பட்ட நிலையில் இருக்கும் பெண்ணின் அனுபவ ட்வீட்டுகள்!

இந்தப் பதிவை லட்சக்கணக்கான மக்கள் லைக் செய்தும் ரி ட்வீட் செய்தும் வருகின்றனர். கொரோனா குறித்த அச்சம் மிகப்பெரிய அளவில் இருக்கும் இந்தச் சமயத்தில் மிகவும் எதார்த்தமான சாதாரண அறிகுறிகளைச் சொல்லும் இந்தப் பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.

Published:Updated:
கொரோனா

கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவில் குறைந்து வரும் நிலையில், மற்ற நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே செல்ல, மறுபக்கம் சிலர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவண்ணம் உள்ளனர். வைரஸ் தாக்குதல் குறித்த அச்சத்தைப் போக்க மீண்டு வந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பலரும் தங்களது அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

அவ்வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜோந்தா ஹலிதி என்ற 22 வயதான இளம்பெண் ஒருவர், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொற்றுநோய் காரணமாக ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றிலிருந்து விடுபடவும் தனது அனுபவத்தைக் குறிப்பாக, அவரது வயதுள்ள நபர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக்கூறி கொரோனா பாதிப்பு தொடர்பான தனது அனுபவத்தை ட்விட்டரில் நாள் வரிசையாகப் பதிவு செய்துள்ளார்.

முதல் நாளில் லேசான வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புண் ஆகியவையும் கடுமையான உடல் சோர்வும் இருந்ததாகக் குறிப்பிடும் ஹலிதி தலைவலி, குளிர், காய்ச்சல், கண்களில் எரிச்சல் என இரண்டாவது நாளில் தீவிரமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இதனால், மிகவும் அசௌகரியமாக உணர்ந்த அவர் சாதாரண தலைவலியாக இருக்கும் என எண்ணி நாள் முழுவதும் ஓய்வெடுத்துள்ளார். மூன்றாவது நாளில் படிப்படியாக உடலின் ஆற்றல் குறையத் தொடங்கியுள்ளது. உடலின் வெப்பநிலையும் அதிகமாகியுள்ளது. பின்னர், மருத்துவமனைக்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மருத்துவர்கள் அவரிடம் இது வைரஸ் தொற்றுக்கான அறிகுறியாக இல்லை என்று கூறி ஆன்டிபயோடிக் மருந்துகளையும் கொடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து ஹலிதிக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. ஆனால், நான்காவது நாள் திடீரென்று காய்ச்சல் குறைந்து, புதிதாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுள்ளார். பின்னர், கொரோனா குறித்த பரிசோதனையை மேற்கொள்ள எண்ணியுள்ளார். பரிசோதனை செய்ய செல்வது கடினமாக இருந்தாகவும் குறிப்பிட்டார். ஏனெனில், அவர் தொடர்ந்து சுய தனிமைப்படுத்துதலில் இருந்தார். ஏற்கெனவே, செய்த பரிசோதனையில் கொரோனா அறிகுறி இல்லை என்றாலும், அதே மருத்துவரிடம் சென்று மீண்டும் பரிசோதனை செய்துள்ளார். முடிவுகள் வரும்வரை, மருத்துவர்கள் அவரை தனிமையில் இருக்கும்படி ஐந்தாவது நாளில் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா
கொரோனா

ஹலிதி, மருத்துவர்களின் அறிவுறையின் பேரில் தனிமையில் இருந்து அவர்கள் கொடுத்த மருந்துகளை எடுத்து வந்துள்ளார். ஆறாவது நாள் முதல் கடுமையாக இருந்த உடல் வலி, இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை படிப்படியாக அவருக்கு குறையத் தொடங்கியுள்ளது. மேலும், உடலில் குறைந்த ஆற்றல் அதிகரிக்கவும் செய்துள்ளது. ஆனால், பத்தாவது நாள் வந்த மருத்துவ அறிக்கையில் பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளன. எனவே, தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்தி வந்துள்ளார்.

சுய தனிமைபடுத்துதல் பற்றி அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``என்னை தனிமைப்படுத்தி நானே என்னை கவனித்துக்கொள்கிறேன். இன்று ஆரோக்கியமாக உணர்கிறேன். வைரஸ் முற்றிலுமாகக் குணமாகிவிட்டதா என்பதை உறுதி செய்ய மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், அதற்கான மருத்துவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். எந்த அதிஷ்டமும் இதுவரை இல்லை. வைரஸ் தொற்று குறித்த அறிகுறிகளை உணர்ந்தால் நீங்கள் பீதி அடைய வேண்டாம். மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, சமூக வலைதள நண்பர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

இளம்பெண் எடுத்துகொண்ட திரவ உணவுகள்
இளம்பெண் எடுத்துகொண்ட திரவ உணவுகள்

``உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. என் மருத்துவர் பரிந்துரைத்தபடி வீட்டில் தனிமையில்தான் இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானது" என்று தான் எடுத்துக்கொள்ளும் தண்ணீர் உணவுகளின் படங்களையும் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ``எனக்கு நோய்த்தொற்று எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்று உறுதியாகத் தெரியாது. ஆனால், கிளப் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்குதான் நான் பாதிக்கப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். கூட்டங்களில் இருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியமானது. எனக்கு அறிகுறி இருப்பது தெரிந்ததும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் உட்பட அனைவரிடமும் இதைப்பற்றி தெரிவித்தேன்" என்று கூறியிருந்தார்.

ட்விட்டரில் அவர் எழுதியுள்ள இந்தப் பதிவை லட்சக்கணக்கான மக்கள் லைக் செய்தும் ரி ட்வீட் செய்தும் வருகின்றனர். கொரோனா குறித்த அச்சம் மிகப்பெரிய அளவில் இருக்கும் இந்தச் சமயத்தில் மிகவும் எதார்த்தமான சாதாரண அறிகுறிகளைச் சொல்லும் இந்தப் பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.