Published:Updated:

இங்கிலாந்தின் 250 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த அக்ஷதா மூர்த்தி, ரிஷி சுனக் தம்பதி!

ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தி

இங்கிலாந்தில் குடியுரிமை இல்லாத நபரான அக்ஷதா மூர்த்தி, இங்கிலாந்தில் வெளிநாட்டு வருமானத்துக்கு வரி செலுத்துவதிலிருந்து தான் விலக்கு அளிக்கப்பட்டவர் என்றார். இந்த `நான்-டோம் (Non-dom)' ஸ்டேட்டஸ் மூலம், அவர் 20 மில்லியன் பவுண்டுகள் வரியைச் சேமித்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

`சண்டே டைம்ஸ்' வெளியிட்ட இங்கிலாந்தின் 250 பணக்காரர்கள் பட்டியலில் அக்ஷதா மூர்த்தியும், அவரின் கணவர் ரிஷி சுனக்கும் இடம்பெற்றுள்ளனர். ரிஷி சுனக்கின் தந்தை இந்தியாவில் பிறந்தவர். ரிஷி, இங்கிலாந்தின் தற்போதைய நிதியமைச்சர். அக்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள்.

அக்ஷதா மூர்த்தியின் வரி விவகாரங்கள் சமீபத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பெங்களூருவை தளமாகக் கொண்டு செயல்படும் தன் தந்தையின் ஐ.டி நிறுவனமான இன்ஃபோசிஸில் இவருக்கு 0.9 சதவிகித பங்கு இருந்தது. அது சுமார் 690 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு டிவிடெண்ட் வருவாயில் 11.6 மில்லியன் பவுண்ட் அவருக்குக் கிடைத்தது.

Infosys
Infosys
vikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கிலாந்தில் குடியுரிமை இல்லாத நபரான அக்ஷதா மூர்த்தி, இங்கிலாந்தில் வெளிநாட்டு வருமானத்துக்கு வரி செலுத்து வதிலிருந்து தான் விலக்கு அளிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார். `அக்ஷதா மூர்த்தி இந்திய குடிமகள்' என்று அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இங்கிலாந்தில் குடியுரிமை பெறாமல் (Non-domocile) ஆக வாழ்பர்கள், இங்கிலாந்தில் சம்பாதிப்பதற்கு மட்டும் வரி செலுத்தினால் போதும் என்பதால், இந்தியாவில் இருந்து வரும் தன் வருமானத்துக்கு தான் இங்கிலாந்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்று தெரிவித்தார் அக்ஷதா. இந்த `நான்-டோம் (Non-dom)' ஸ்டேட்டஸ் மூலம், அவர் 20 மில்லியன் பவுண்டுகள் வரியைச் சேமித்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தத் தம்பதி 222-வது இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism