Published:Updated:

`லாக் டவுனால் பரிதவித்த உயிரியல் பூங்கா விலங்குகள்’ - நிதி திரட்டி உணவளிக்கும் ஆஸ்திரேலிய நபர்

நாங்கள் ஆரோக்கியமான உயிரினங்களைப் பார்க்கலாம் என்று மகிழ்ச்சியான மனநிலையில்தான் அங்கு சென்றோம். பூங்காவுக்குள் செல்லச் செல்ல அங்கிருந்த மோசமான நிலவரத்தைப் புரிந்துகொண்டோம்.

கொரோனாவால் பாதிப்படைந்த பல்வேறு துறைகளில் சுற்றுலாத்துறை முக்கியமானது எனலாம். இதனால், பல உயிரியல் பூங்காக்கள் வருமானமின்றி, அங்கு வாழும் விலங்குகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றன. அவ்வகையில், தாய்லாந்தில் கைவிடப்பட்ட பூகத் என்ற உயிரியல் பூங்காவில் உணவின்றி விலங்குகள் உயிரிழந்து வருவதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தில் வேலை செய்து வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிண் நியுகென் என்பவர் இந்த உயிரியல் பூங்காவுக்குத் தன் நண்பர்களுடன் சென்றபோது அங்குள்ள சூழலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து பூங்கா தொடர்பான தகவல்களை யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

கெண் மற்றும் அவரது நண்பர்
கெண் மற்றும் அவரது நண்பர்

வீடியோவில் அவர் பேசும்போது, ``நாங்கள் ஆரோக்கியமான உயிரினங்களைப் பார்க்கலாம் என்று மகிழ்ச்சியான மனநிலையில்தான் அங்கு சென்றோம். முதலில் நாங்கள் அடைபட்ட நிலையில் இருந்த ஒரு டஜன் முதலைகளைக் கண்டோம். பூங்காவுக்குள் செல்லச் செல்ல அங்கிருந்த மோசமான நிலவரத்தைப் புரிந்துகொண்டோம். இறக்கும் தறுவாயில் இருந்த அம்முதலைகளின் நிலை மிகுந்த கவலையை அளித்தது. சருகுகளும் குப்பைகளும் அழுக்குப்படிந்த கூண்டுகளில் நிரம்பியிருந்தன. முதலைகள், காய்ந்த இலைகள் சூழ்ந்த நீரில் நீந்திக்கொண்டிருந்தன. பின்னர், ஓர் பதுங்கும் புலியைப் பார்த்தேன். அது மனிதர்களைக் கண்டு பயந்தது” என்றார். அப்புலிகள் இறக்கப்போவதாவும் அந்த வலி தன்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

 `இருண்ட நாள்களில்கூட வாழ்க்கை தொடர்கிறது!’-ஒட்டகச்சிவிங்கிக்கு `நம்பிக்கை’ பெயர்சூட்டிய அதிகாரிகள்

ஆஸ்திரேலிய நபர்கள் மறுநாள் விலங்குகளுக்கு உணவளிக்க மாமிசங்களுடன் வந்தபோது அந்த உயிரியல் பூங்கா பராமரிப்பாளரை சந்தித்துள்ளனர். அப்போது அவர் மிண் மற்றும் அவர் நண்பர்களிடம் 2000 பாட் பணம் கேட்டுள்ளார். அது ஒரு நாளைக்கு ஒரு புலிக்கு உணவளிக்க போதுமானது என்றும் கூறியுள்ளார். தி தாய்கர் என்னும் பத்திரிகை கொரோனாவால் விளைந்த ஊரடங்கால், சுற்றுலா முடங்கியதால் அந்த உயிரியல் பூங்காவின் உரிமையாளர் வருமானமின்றி கடனுக்குள்ளானதாக தெரிவித்துள்ளது. அந்த உயிரியல் பூங்கா விலங்குகளைக் கொடுமைப்படுத்தியதற்காக ஏற்கெனவே சர்ச்சைக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

புலி
புலி

பிறகு மிண் மற்றும் அவர் நண்பர்கள் கோ ஃபண்ட் மி எனும் பக்கம் ஆரம்பித்து நிதி திரட்டி அங்குள்ள புலிகள், கரடிகள், மயில்கள், மனிதக் குரங்குகள் மற்றும் சில விலங்குகளுக்கும் உணவளித்து வருகின்றனர். அவர்கள் அங்கே கம்பிகளுக்கிடைய உணவளிப்பது, சக்கர வண்டியில் உணவை நிரப்புவது போன்ற காட்சிகளையும் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். மற்றொரு வீடியோவில் அவர்களது செயல்கள் யாவும் விலங்குகளின் நலனுக்காக மட்டும்தான். அந்த உயிரியல் பூங்காவின் நிர்வாகத்தை இழிவுபடுத்துவதற்கல்ல என்றும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த பிறகும் பூங்காவில் உள்ள சில விலங்குகளின் உயிர் பரிதாபத்துக்கு உரிய நிலையில்தான் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

கொரோனா, டெங்கு இல்லை... நீலகிரி மருத்துவர் மரணத்துக்குக் காரணம் Scrub Typhus... விளக்கும் மருத்துவர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு