Published:Updated:

`சேவல் கொத்தியதில் பரிதாபமாக உயிரிழந்த பெண்'- ஆஸ்திரேலியாவில் நடந்த சோகம்!

ராம் பிரசாத்

ஆஸ்திரேலியாவில் சேவல் கொத்தியதில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

Rooster
Rooster ( Representation image )

தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் சில கோழிகளை வளர்த்து வந்தார். கோழிகளைப் பராமரிப்பது, அவற்றுக்குத் தேவையான பணிகளையும் அவரே கவனித்து வந்துள்ளார். கோழி முட்டைகளை எடுப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுக்குச் சென்று அங்கிருந்த முட்டைகளை எடுத்துள்ளார். இதைக் கவனித்த சேவல் ஒன்று அவரது கால் நரம்புகளில் கொத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அங்கிருந்து நகரவிடாமல் காலில் கொத்தியுள்ளது.

egg
egg

அந்தப்பெண் வெரிகோஸ் வெயின் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் காலின் தொடைப்பகுதிகளுக்குக் கீழ் நரம்புகள் முடிச்சு போட்டு இருப்பதுபோல் இருக்கும். இதன் காரணமாகக் கால் பகுதியில் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு இருக்கும். மேலும், வலியும் வேதனையும் இருக்கும். சேவல் அந்தப் பெண்ணின் காலில் கொத்தியதால் அவரால் நடக்க முடியவில்லை. காலில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலே மயங்கிவிழுந்துவிட்டார்.

வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது அவர் தரையில் மயங்கி இருந்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். சேவல் கொத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்த செய்தி அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Rooster
Rooster

இறந்துபோன பெண் குறித்த தகவலை ஆஸ்திரேலியா போலீஸார் வெளியிட மறுத்துவிட்டனர். குடும்பத்தில் ஒருவரை இழந்த வேதனையில் இருப்பவர்களுக்கு இந்தச் செய்தி மூலம் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.