Published:Updated:

பிரேசிலில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி - மீட்புப்பணிகள் தீவிரம்!

பிரேசில்

பிரேசிலில் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக 24 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரேசிலில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி - மீட்புப்பணிகள் தீவிரம்!

பிரேசிலில் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக 24 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பிரேசில்

பிரேசில் நாட்டின் சயோ பலோ மாகாணத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சொந்த வீடுகளைவிட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றன.

பிரேசில்
பிரேசில்

தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக அந்த மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 24 பேர் உயிரிழந்ததுவிட்டதாகவும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், நிலச்சரிவால் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில், மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism