Published:Updated:

`மிகப்பெரிய சாதனை மட்டுமல்ல, சவாலும்கூட!’ - முதன்முறையாக கொரோனா பாதிப்புகள் இல்லாத சீனா

சீனா - கொரோனா
சீனா - கொரோனா ( AP )

``சீனாவில் முதன்முறையாக சனிக்கிழமை எந்தப் பகுதியிலும் ஒரு வழக்குகள்கூட பதிவாகவில்லை" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்”

சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் பலவற்றையும் அதிகமாக பாதித்து வருகிறது. இந்த பாதிப்பால் மக்கள் இயல்புநிலைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல பிரச்னைகளும் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளையும் சூழ்ந்துள்ளன.

உலகளவில் இதுவரை இந்த வைரஸால் 53 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். 3.40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகிறது. எனினும், இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் திணறி வருகின்றன.

கொரோனா
கொரோனா

ஆரம்பத்தில் அதிகமாகப் பாதிப்படைந்த சீனா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தற்போது வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வரத்தொடங்கியுள்ளன. குறிப்பாக, சீனா அதிகளவில் தன்னுடைய இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. சீனாவில் இதுவரை சுமார் 82,900 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்த வைரஸுக்கு அந்நாட்டில் 4,634 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பாதிப்பின் உச்சத்தை அடைந்தது சீனா. ஆனால், அந்நாட்டில் அமல்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் பிப்ரவரிக்குப் பிறகு வியக்கும் வகையில் வைரஸ் பரவல் குறைந்து வந்தன. எனினும் சீனா, எண்ணிக்கை தொடர்பான சர்ச்சையில் சிக்கியது.

`சட்ட நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்!’ - அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

1.4 பில்லியன் (அதாவது 140 கோடி) மக்கள் வாழும் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உள்ளது பலரையும் சந்தேகத்துக்கு உள்ளாக்கியது. சீனாவைவிட மிகச்சிறிய நாடுகளில்கூட இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவைவிட அதிமாக இருந்த நிலையில் பல நாடுகளும் சீனாவின் மீது எண்ணிக்கையை மறைப்பதாக குற்றச்சாட்டுகளை எழுப்பியது.

இதையடுத்து அமெரிக்கா, சர்வதேச சமூகத்துடன் கொரோனா வைரஸ் குறித்து எவ்வளவு தகவல்களை சீனா பகிர்ந்துகொண்டது என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியது. அமெரிக்காவில் பாதிப்பு ஏற்பட தொடங்கியதில் இருந்தே அதிபர் ட்ரம்ப், சீனாவின் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பி வந்ததோடு சீனாவின் மீது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதுதொடர்பாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே இன்று வரை வார்த்தைப் போர் தொடர்ந்து வருகிறது.

கொரோனா
கொரோனா

வைரஸ் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் சீனாவின் பல இடங்களிலும் தொடர்ந்து தினமும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வந்தன. இதனால், இரண்டாவது அலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடம் நிலவியது. இந்த நிலையில், சீனாவில் முதன்முறையாக சனிக்கிழமை எந்தப் பகுதியிலும் ஒரு வழக்குகள்கூட பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், ``மிகப்பெரிய சாதனை” என்றுகூறி கொண்டாடியுள்ளனர். சீனாவின் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் லி கெக்கியாங், ``கொரோனா வைரஸுக்கு எதிராக நாடு முக்கிய சாதனைகளைச் செய்துள்ளது” என்று கூறியதோடு ``நாடு இன்னும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

`உங்கள் திறமையின்மையாலேயே இவ்வளவு மரணங்கள்!’ - தொடரும் அமெரிக்கா - சீனா வார்த்தைப் போர்
அடுத்த கட்டுரைக்கு