Published:Updated:

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ - கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

``நாங்கள் மிகவும் மோசமான மைல்கல்லை எட்டியுள்ளோம். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” -ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவிய ஆரம்பகாலத்தில் அதிபர் ட்ரம்ப் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததே இத்தகைய மோசமான சூழலுக்கு காரணம் எனப் பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால், ட்ரம்ப் சீனாவின் மீது விமர்சனங்களைத் தொடுத்து வருகிறார். இவ்வளவு கடுமையான சூழலிலும் சீனாவின் மீது குற்றச்சாட்டுகளை எழுப்புவது பலரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
vikatan

இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாங்கள் மிகவும் மோசமான மைல்கல்லை எட்டியுள்ளோம். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சூழலிலும் பணியாற்றுபவர்களுக்கு எனது அன்பை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், ``உலகம் முழுவதும் பரவியுள்ள இந்தக் கொரோனா வைரஸ், சீனாவின் மிகவும் மோசமான பரிசு. இது நல்லதல்ல” என்று கூறியுள்ளார்.

சீனா மற்றும் அமெரிக்கா இடையே கொரோனா பரவல் தொடர்பாக வார்த்தைப் போர் நடந்து வரும் சூழலில், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார். அவருக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமானது, ``இருநாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எல்லைகளில் வீரர்கள் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், நாங்கள் நாட்டின் இணையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாப்போம்” என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தவறுதலாக வெளியான வங்கிக் கணக்கு விவரங்கள்; அதிர்ச்சியில் ட்ரம்ப்!- சர்ச்சையில் வெள்ளை மாளிகை ஊழியர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு