Published:Updated:

தோழிகளுக்கு டஃப் கொடுத்து உடற்பயிற்சி! - 19 வயது சீனப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

ராம் பிரசாத்

சீனாவில் தோழிகள் விளையாட்டாகச் செய்த காரியம் விபரீதத்தில் முடிந்துள்ளது.

சிகிச்சை பெற்று வரும் சியாங்
சிகிச்சை பெற்று வரும் சியாங்

சீனாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் சியாங் டங். இவர் தனது தோழிகளுடன் இன்டர்நெட்டில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார். அப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பார்த்தவர் தன்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும் எனக் கூறியுள்ளார். அவர் கூறியது ஸ்குவாட்ஸ் செய்யும் வீடியோ. ஸ்குவாட் பயிற்சி என்பது கைகளை முன்னால் நீட்டிக்கொண்டு உட்கார்ந்து எழுவது. தோப்புக்கரணம் போடுவது போலத்தான். இது தொடை மட்டும் மூட்டுகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி.

Representation Photos
Representation Photos
life.spartan.com

சக தோழிகளும் சியாங்குடன் களத்தில் இறங்கினர். விளையாட்டாக ஸ்குவாட்ஸ் செய்ய ஆரம்பித்தனர். தங்களால் முடிந்த வரை சிலர் டஃப் கொடுத்தனர். சியாங் மற்றும் அவரது தோழி ஒருவரும் தொடர்ந்து ஸ்குவாட்ஸ் செய்துகொண்டிருந்தனர். இப்படியே 1000 முறை செய்துவிட்டனர். சிறிது கால்வலியுடன் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டுள்ளார் சியாங். முதல் இரண்டு நாள்கள் எந்தப் பாதிப்பும் இல்லை. அதற்கு அடுத்த நாள்தான் இந்த விளையாட்டின் விபரீதம் அவருக்குப் புரிந்தது. அவரின் கால்கள் வலுவிழந்து இருந்தன. சிறுநீர் பழுப்பு நிறத்தில் வந்துள்ளது. தான் மிகவும் சோர்வாக இருப்பதாக உணர்ந்தார். இதனையடுத்து தனது நண்பரின் உதவியுடன் மருத்துவமனைக்கு விரைந்தார்.

பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கை உடைந்தவர்கள் எத்தனை பேர்?- போலீஸுக்கு 10 ஆர்.டி.ஐ கேள்விகள்!

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து வேறொரு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தப்பட்டார். அங்கு அவரது சிறுநீர் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, ராப்டோமயோலிசிஸ் (rhabdomyolysis) என்ற நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தசை நார்களில் ஏற்படும் பிரச்னைகளே இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. உட்புற தசைகளில் காயம் ஏற்படுவதினால் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர பிரச்னைகளுக்கு இது கொண்டு செல்கிறது. கடுமையான விபத்துகளின்போதுதான் இதுபோன்று நிகழும். இந்தப் பெண் தொடர்ந்து 1000 முறை squats செய்ததால்தான் அவரது தசைகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவேதான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தோழிகளுக்கு டஃப் கொடுத்து உடற்பயிற்சி! - 19 வயது சீனப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

மையோக்ளோபின் அளவுக்கு அதிகமாக இருப்பதால் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தற்போது அந்தப்பெண் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். உள் உறுப்புகளை பாதிக்காதவண்ணம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. `மையோக்ளோபின் அளவு கட்டுக்குள் வந்தவுடன் வீட்டிற்குச் செல்லலாம்' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்வயது பெண் என்பதால் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படவில்லை. வயதானவர்கள் என்றால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். `இது ஓர் ஆபத்தான நோய்' என மருத்துவர்கள் கூறுகின்றனர். `அதிகப்படியான உடற்பயிற்சியும் ஆபத்தை கொடுக்கும்' என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.