தந்தை ஒருவரின் வித்தியாசமான பழக்கத்தால், அவர் தன் குழந்தைகளைப் பார்ப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபருக்கு (சட்டபூர்வமாக பெயர் தவிர்க்கப்பட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது), டயப்பர் தொடர்பான ஃபெட்டிஷ் (Fetish) குணம் உள்ளது. ஃபெட்டிஷ் என்பது, குறிப்பிட்ட ஒரு பொருளை, ஆடையை, உடலின் ஒரு பகுதியைப் பார்க்கும்போது ஏற்படும் பாலியல் நாட்டம். சம்பந்தப்பட்ட நபருக்கு, அது டயப்பரை பார்க்கும்போது ஏற்படுகிறது. மேலும், அந்த நபர் அவ்வப்போது வீட்டுக்குள் டயப்பர் அணிந்தபடி வலம் வந்திருக்கிறார்.
இந்நிலையில், அந்த நபரின் இந்தப் பழக்கத்தை காரணம் காட்டி, அவர் தன் குழந்தைகளைப் பார்க்கத் தடை விதிக்கும்படி அவரின் முன்னாள் மனைவி நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் குடும்ப நீதிமன்றம், அவர் தன் குழந்தைகளைப் பார்க்கத் தடை விதித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சம்பந்தப்பட்டவரின் முன்னாள் மனைவி, அவரின் இந்தப் பழக்கத்தை தான் கவனித்து வந்ததாகவும், காலப்போக்கில் அவர் வீட்டிலேயே டயப்பர் அணிந்து வலம் வரத் தொடங்கியதாகவும், இருவரும் மணமுறிவு பெற்று பிரிந்துவிட்டதாகவும், பெற்றோர் கடமைகளை பகிர்ந்து பார்த்துக்கொள்ள இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஒருமுறை குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்தபோது, அந்த நபர் அணிந்திருந்த டயப்பரின் ஒரு பகுதி வெளியே தெரிந்துள்ளது. அப்போது அவரின் முன்னாள் மனைவி சட்ட நடவடிக்கையை எடுக்க முடிவு செய்து வழக்குப் பதிவு செய்துள்ளார். அதை தொடர்ந்து, அந்த நபர் தன் குழந்தைகளைப் பார்ப்பதற்கு 2021-ம் ஆண்டு நீதிமன்றம் தடை விதித்தது.
தன் குழந்தைகளுக்கு தன்னால் எந்த ஆபத்தும் இல்லை என, சம்பந்தப்பட்ட நபர் மேல்முறையீடு செய்ய, அவரது பிரச்னைகளில் உள்ள ஆபத்துகளை சரியாக விளக்கவில்லை எனக் கூறி, அவரது கோரிக்கையை குடும்ப நீதிமன்றம் நிராகரித்துள்ளது.