Published:Updated:

`இனி வொர்க் ஃப்ரம் ஹோம் கிடையாது; வாரத்தில் 40 மணி நேரம் வேலை கட்டாயம்!’ - எலான் மஸ்க் அதிரடி

எலான் மஸ்க்

``நியாயமான காரணங்களுக்காக யாராவது வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைத் தொடர விரும்பினால், அந்த விவகாரம் குறித்து நானே நேரடியாக விசாரித்து, அதற்கான அனுமதியை வழங்குவேன்" - எலான் மஸ்க்

`இனி வொர்க் ஃப்ரம் ஹோம் கிடையாது; வாரத்தில் 40 மணி நேரம் வேலை கட்டாயம்!’ - எலான் மஸ்க் அதிரடி

``நியாயமான காரணங்களுக்காக யாராவது வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைத் தொடர விரும்பினால், அந்த விவகாரம் குறித்து நானே நேரடியாக விசாரித்து, அதற்கான அனுமதியை வழங்குவேன்" - எலான் மஸ்க்

Published:Updated:
எலான் மஸ்க்

டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தன் ஊழியர்களை `வொர்க் ஃப்ரம் ஹோம்'-லிருந்து உடனடியாக அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்றும், வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை நிறுவனத்தில் நிறுத்தியுள்ளதாகவும் தன் ஊழியர்களுக்கு மெயில் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்த இமெயிலின் ஸ்கிரீன்ஷாட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் `வொர்க் ஃப்ரம் ஹோம்' எனப்படும் வீட்டிலிருந்து வேலை செய்யும் மாடலை ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தின. கோவிட் பெருந்தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில் பல நிறுவன ஊழியர்கள், தங்கள் அலுவலகங் களுக்குத் திரும்பியிருக்கின்றனர். அந்த வகையில் எலான் மஸ்க் தன் ஊழியர்களையும் அலுவலகத்தில் வந்து பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர் அனுப்பியுள்ள இமெயிலில், `வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும். ஒரு வாரத்துக்கு குறைந்தது 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும். குறைந்தது 40 மணி நேரம் என்றுதான் சொல்கிறேன். இதற்கு விருப்பமில்லாதவர்கள் டெஸ்லா நிறுவனத்திலிருந்து வெளியேறலாம்.

நியாயமான காரணங்களுக்காக யாராவது வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைத் தொடர விரும்பினால், அந்த விவகாரம் குறித்து நானே நேரடியாக விசாரித்து, அதற்கான அனுமதியை வழங்குவேன்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்றால் பிரதான டெஸ்லா அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும். தங்கள் பணி கடமைகளுக்குத் தொடர்பில்லாத கிளை அலுவலகங்களில் பணி செய்யக் கூடாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்ததே எலான் மஸ்கின் இந்த அதிரடியான முடிவுக்குக் காரணம். இதனால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வது ஊழியர்களுக்கும் தனக்குமான முக்கியமான கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism