Published:Updated:

தலைமுடியை புருவத்தில் வைத்து சிகிச்சை செய்துகொண்ட பெண்; புருவம் வளர்ந்துகொண்டே இருக்கும் விநோதம்!

Eyebrow (Representational Image) ( Pexels )

`ட்ரான்ஸ்ப்ளான்ட்’ முறை மூலம் தன் தலைமுடியை எடுத்து புருவத்தில் வைக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன் மூலம் அவர் புருவத்தின் வடிவம் அழகாக மாறினாலும், மாதம் மாதம் புருவம் வேகமாக வளரும் பிரச்னையை அவர் எதிர்கொண்டு வருகிறார்.

தலைமுடியை புருவத்தில் வைத்து சிகிச்சை செய்துகொண்ட பெண்; புருவம் வளர்ந்துகொண்டே இருக்கும் விநோதம்!

`ட்ரான்ஸ்ப்ளான்ட்’ முறை மூலம் தன் தலைமுடியை எடுத்து புருவத்தில் வைக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன் மூலம் அவர் புருவத்தின் வடிவம் அழகாக மாறினாலும், மாதம் மாதம் புருவம் வேகமாக வளரும் பிரச்னையை அவர் எதிர்கொண்டு வருகிறார்.

Published:Updated:
Eyebrow (Representational Image) ( Pexels )

இங்கிலாந்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் தன்னுடைய புருவங்களை அழகாக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே, ’ட்ரான்ஸ்ப்ளான்ட்’ முறை மூலம் தன் தலைமுடியை எடுத்து புருவத்தில் வைக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன் மூலம் அவர் புருவத்தின் வடிவம் அழகாக மாறினாலும், மாதம் மாதம் புருவம் வேகமாக வளரும் பிரச்னையை அவர் எதிர்கொண்டு வருகிறார். எனவே, இப்போது புருவத்தை வெட்டுவது சிரமமாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Eyebrows (Representational Image)
Eyebrows (Representational Image)

இங்கிலாந்தை சேர்ந்த இசபெல் குட்சி, 36 வயது பெண். இவர் தனது புருவங்களை அதிகமாக ட்ரிம் செய்த காரணத்தினால் புருவத்தின் அடர்த்தி குறைய ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து தனது புருவத்தின் அழகை பராமரிக்க, 30 நிமிடங்களுக்கு மேல் புருவத்தை வரைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு நல்ல அடர்த்தியான, மென்மையான புருவம் வேண்டும் என்று விரும்பினார் இசபெல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், அமெரிக்காவில் புருவத்தை மாற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்ற விளம்பரத்தை பார்த்திருக்கிறார் இசபெல். அமெரிக்க சென்று புருவத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூபாய் 1.4 லட்சம் அளவிற்கு பணத்தை செலவு செய்துள்ளார்.

Eyebrow (Representational Image)
Eyebrow (Representational Image)

வித்தியாசமான இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறுகையில், 'இசபெல்லின் தலையின் பின்பகுதியில் இருந்து தனித்தனியான மயிர்க்கால்களை எடுத்து, மூன்று மணி நேர செயல்முறையில் கையால், புருவத்தில் தேவையான இடங்களில் அட்டாச் செய்தோம்’ என்றிருக்கிறார்கள்.

தனது புதிய, அடர்த்தியான புருவங்களைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தார் இசபெல். ஆனால், அவரது புதிய புருவங்கள், தலைமுடியை போல வேகமாக வளரும் பிரச்னையை இப்போது அவர் சந்தித்து வருகிறார்.

Eyebrow (Representationl Image)
Eyebrow (Representationl Image)
Pixabay

இது குறித்து இசபெல், ’இந்த அறுவை சிகிச்சை உண்மையிலேயே வலி இல்லாமல் இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்காக போடப்படும் மயக்க ஊசிகள்தான் மிகுந்த வலியை ஏற்படுத்தின. இரண்டு வாரங்களுக்கு புருவத்தை தொடவோ, கழுவவோ கூடாது என்று மருத்துவர்கள் கூறினர். அது மிகக் கடினமாக இருந்தது. இந்த சிகிச்சை மேற்கொண்ட பின் ஐந்து மாதங்களில் புருவம் வளரத் தொடங்கும், பின் எட்டு மாதங்களில் வளர்ச்சி முழுமையடையும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.