Published:Updated:

`அதிபர் தேர்தலில் உதவ ஜின்பிங்கிடம் கெஞ்சிய ட்ரம்ப்?!’ -ரகசியம் நிறைந்த அதிகாரியின் புத்தகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ( AP )

``ரஷ்ய அதிபர் புதின் போன்ற தலைவர்களுடன் ட்ரம்ப் பேசிக் கொண்டிருக்கும்போது அறிவின் பற்றாக்குறை அவருக்குப் பாதகமாக அமைந்தது. புதின் நினைத்தால் ட்ரம்பை ஒரு பிடில் போல வைத்து விளையாட முடியும் என்றே நினைக்கிறேன்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் பதவியேற்ற காலம் முதல் தற்போது வரை கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். வெளியுறவுக் கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா விவகாரம் எனப் பல விஷயங்களிலும் ட்ரம்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர். அவரது ஆட்சிக்காலமும் இன்னும் சில மாதங்களில் முடியவுள்ளது.

மீண்டும் அவர் தேர்தலில் நிற்பதால் அவருக்கு எதிரான பிரசாரங்கள் கடுமையாக நடந்து வருகின்றன. இந்தநிலையில், அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ட்ரம்பின் ரகசிய விவாதங்கள், சர்ச்சையான நடவடிக்கைகள் ஆகியன குறித்து `The Room Where It Happened: A White House Memoir’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதை வெளியிட ட்ரம்ப் தலைமையிலான அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த விஷயம் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

ஜான் போல்டன்
ஜான் போல்டன்
AP

ஜான் போல்டனின் புத்தகத்தை வெளியிட அமெரிக்க அரசாங்கம் அனுமதி தர தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும், இந்தப் புத்தகத்தை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, இந்தப் புத்தகத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியுள்ளது.

அதில், ``ஜப்பானில் உள்ள ஒசாகாவில் கடந்த ஆண்டு நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே கலந்துரையாடல் நடந்தது. அப்போது ட்ரம்ப், அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற தனக்கு உதவ வேண்டும் என ஜின்பிங்கிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்” என்று ஜான் போல்டன் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜான் போல்டன், ``அதிபர் ட்ரம்ப் கூறிய சரியான வார்த்தைகளை என்னால் குறிப்பிட முடியவில்லை. ஏனெனில், அரசாங்கம் புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பு புத்தகத்தை ஆய்வு செய்ததில் அந்த வார்த்தைகளை வெளியிடத் தடை விதித்தது” என்று கூறியுள்ளார்.

`ட்ரம்ப்புக்கு கவுன்டர் கொடுத்த போலீஸ்; குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்!’ - திணறும் அமெரிக்கா

ட்ரம்ப் தனது ஆட்சியில் சொந்த அரசியல் நலன்களுக்காக வெளியுறவுக் கொள்கைகளை மேற்கொண்டதாகவும் ஜான் போல்டன் பதவியில் இருந்தபோது, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கணக்கீடுகள் இல்லாமல் ட்ரம்ப் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா விவகாரம் மற்றும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்னைகளால் ட்ரம்புக்கு ஏற்கெனவே ஆதரவுகள் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜான் போல்டனின் புத்தகமும் வெளியானால் ட்ரம்பின் ஆட்சி பற்றிய அதிக ரகசியங்கள் வெளிவரும் என கூறப்படுகிறது. இதனால், வரும் தேர்தலில் அவருக்கு கடுமையான பின்னடைவு ஏற்படும். எனவே, இந்தப் புத்தக வெளியீட்டை நிறுத்த டிரம்ப்பின் நிர்வாகம் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வாஷிங்டன் நீதிமன்றத்தில் இந்தப் புத்தக வெளியீட்டை நிறுத்த அவசரத் தடை உத்தரவு வழங்க வேண்டும் எனக் கடந்த புதன்கிழமை இரவு அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் புத்தகம் பற்றிய தகவல்களை நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை முன்னதாகவே வெளியிட்டன.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

புத்தகம் வெளியீடு தொடர்பாக ட்ரம்ப்பிடம் புதன்கிழமை இரவு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, `போல்டன் மிக எளிமையாக சட்டத்தை மீறுகிறார்' என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்கும்விதமாக பதிலளித்தார். மேலும், அவரை மட்டம் தட்டும்விதமாகவும் விமர்சித்துள்ளார். முன்னதாக, வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம், `ஜோல்டன் ஒரு பொய்யர்’ என்று கூறியுள்ளார்.

வெளியுறவு கொள்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார், ட்ரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் டிம், ``சீன அதிபரிடம் ட்ரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தில் தலையிட வேண்டும் எனக் கூறியதாக போல்டன் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு அபத்தமானது. அவர் தனது புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறார், அவ்வளவுதான்” என்றார். ஆனால், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ, போல்டனின் குற்றச்சாட்டுகளை மறுக்காமல் `வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் அந்தப் புத்தகத்தில் நிறைந்துள்ளது’ எனக் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான தகவல்களை ஜான் போல்டன் குறிப்பிடுகையில், ``நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி ட்ரம்ப் ஆய்வு செய்யவில்லை. அவர் கையாள்கிற மற்ற நாடுகளைப் பற்றி அதிகமாக அறிந்திருக்கவில்லை” என்கிறார். எடுத்துக்காட்டாக, `பின்லாந்து ரஷ்யாவின் ஒரு பகுதியா?' என ட்ரம்ப் கேட்டதாக போல்டன் குறிப்பிடுகிறார். ட்ரம்ப், தத்துவம் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியை நடத்தவில்லை என்றும் அவர் தன்னை அடித்தளமாகக் கொண்டுள்ளார் என்றும் போல்டன் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல போல்டன் அளித்த பேட்டி ஒன்றில், ``ரஷ்ய அதிபர் புதின் போன்ற தலைவர்களுடன் அவர் பேசிக் கொண்டிருக்கும்போது அறிவின் பற்றாக்குறை அவருக்குப் பாதகமாக அமைந்தது. புதின் நினைத்தால் ட்ரம்பை ஒரு பிடில் போல வைத்து விளையாட முடியும் என்றே நினைக்கிறேன். புதின் அதிக புத்திசாலியானவர். அவர் ட்ரம்ப் குறித்து கவலைப்படுவதாகவே நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். மேலும், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சீனாவை ட்ரம்ப் விமர்சித்து வருவதையும் தேர்தலுக்கான மூலம் என்றே அவர் குறிப்பிடுகிறார்.

புத்தகம்
புத்தகம்
NY

சீனாவின் மீதான ட்ரம்ப்பின் கடுமையான விமர்சனங்கள் அனைத்தும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் கரைந்து போகக்கூடிய ஒன்றே தவிர வேறொன்றுமில்லை என்றும் கூறியுள்ளார். இந்தநிலையில், ரகசியமான தகவல்களை புத்தகத்தில் குறிப்பிட போல்டன் முன் அனுமதி பெறவில்லை என்ற வாதத்தை வைத்து புத்தகத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சட்டரீதியான மோதல்களும் புத்தகம் வெளியாவதற்கு முன்பே எழுந்துவரும் விமர்சனங்களும் புத்தகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எனினும், கடுமையான எதிர்ப்புகள் நிலவுவதால் இந்தப் புத்தகம் வெளியாகுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

`அமெரிக்கா.. இந்தியா.. தைவான்.. ஹாங்காங்!’ - போருக்குத் தயாராகச் சொல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு