Published:Updated:

கணக்கில் 6/100 பெற்ற மகன், கதறி அழுத அப்பா; அம்மாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?! I Viral Video

கணக்கு பாடம்

சீனாவில் வசிக்கும் ஒரு தந்தை, தன் மகன் கணக்குப் பாடத்தை நன்றாகப் படிக்கவில்லை என்று, தானே ஆசிரியராக மாறி, வருடம் முழுவதும் உயிரைக் கொடுத்துப் பாடம் எடுத்திருக்கிறார். மகன் கணக்குப் பாடத்தில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிபெறுவான் எனப் பல கனவுக் கோட்டைகளைக் கட்டியுள்ளார்.

கணக்கில் 6/100 பெற்ற மகன், கதறி அழுத அப்பா; அம்மாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?! I Viral Video

சீனாவில் வசிக்கும் ஒரு தந்தை, தன் மகன் கணக்குப் பாடத்தை நன்றாகப் படிக்கவில்லை என்று, தானே ஆசிரியராக மாறி, வருடம் முழுவதும் உயிரைக் கொடுத்துப் பாடம் எடுத்திருக்கிறார். மகன் கணக்குப் பாடத்தில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிபெறுவான் எனப் பல கனவுக் கோட்டைகளைக் கட்டியுள்ளார்.

Published:Updated:
கணக்கு பாடம்

'ஒருவாட்டி கேட்டாலே சினிமா பாட்டெல்லாம் மனப்பாடம் ஆகுது, ஆனா இந்தக் கணக்குப் பாடம் மட்டும் மூளைக்குள்ள போகவே மாட்டேங்குது' என்று கணக்குப் பாடம் பற்றி குறை சொல்லாத மாணவர்கள் அரிது.

வேப்பங்காயாக கசக்கும் கணக்கு பாடத்தில் பிள்ளைகளை எப்படியாவது தேற்றி விடவேண்டும் என தனியாக டியூஷன் அனுப்பும் பெற்றோர்களும் உண்டு.

Father-Son
Father-Son
Image by Free-Photos from Pixabay

அப்படித்தான் சீனாவில் வசிக்கும் ஒரு தந்தை, தன்னுடைய மகன் கணக்குப் பாடத்தை நன்றாகப் படிக்கவில்லை என்று, தானே ஆசிரியராக மாறி, வருடம் முழுவதும் உயிரைக் கொடுத்துப் பாடம் எடுத்திருக்கிறார்.

பள்ளி முடிந்தும் வீடும் திரும்பும் மகனுக்கு வீட்டில் கணக்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். தன் மகன் கணக்குப் பாடத்தில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிபெற்று விடுவான் என, பல கனவு கோட்டைகளைக் கட்டி உள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், தேர்வு முடிவு வேறுமாதிரி இருந்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக, மகன் கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு வெறும் 6 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். நம்மூரில் இப்படி நடந்திருந்தால், மகனை அப்ப அடி பின்னி எடுத்து இருத்திருக்க வாய்ப்புள்ளது.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்

ஆனால், இந்தத் தந்தையோ மகனின் மதிப்பெண்களைக் கண்டதும் கதறி அழுதுள்ளார். அந்தக் காட்சியை வீடியோ எடுக்கும், தாயும் சிரித்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

''என்னதான் இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா.. அந்தப் பையன் பாஸ் ஆகும் அளவுக்காவது படிச்சிருக்கலாம்'' என ஒரு தரப்பிலும், ''வராத படிப்பை வா வான்னா எப்படி வரும், அந்தப் பிள்ளையைப் போட்டு என்ன பாடுபடுத்தினாங்களோ'' என மகனுக்கு ஆதரவாகவும் முரண்பட்ட கமென்ட்டுகள் குவிந்து வருகின்றன.