Published:Updated:

டான்சில்ஸ் அறுவைசிகிச்சை, உயிரிழந்த முன்னாள் `மிஸ் பிரேசில்’ - என்ன நடந்தது?

Gleycy Correia ( gleycy correia instagram )

அறுவைசிகிச்சை முடிந்த சில நாள்களுக்குப் பிறகு, கிளேசிக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 4-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த திங்களன்று இவரின் உயிர் பிரிந்துள்ளது.

மாடல், அழகுக்கலை நிபுணர் எனப் பல பரிமாணங்களை கொண்ட 27 வயதான கிளேசி கொரியா (Gleycy Correia), 2018-ம் ஆண்டு `மிஸ் யுனைட்டெட் கான்டினென்ட் பிரேஸில்’ அழகி பட்டத்தைப் பெற்றவர். கடந்த இரண்டு மாதங்களாக கோமாவில் இருந்த இவருக்கு டான்சில்ஸை (tonsils) அகற்றும் தொடர் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

டான்சில்ஸ் அறுவைசிகிச்சை, உயிரிழந்த முன்னாள் `மிஸ் பிரேசில்’ - என்ன நடந்தது?
இன்ஸ்டா

அறுவைசிகிச்சை முடிந்த சில நாள்களுக்குப் பிறகு, கிளேசிக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 4-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த திங்களன்று இவரின் உயிர் பிரிந்துள்ளது. இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, செவ்வாய்க்கிழமையன்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எங்கள் இளவரசியை எடுத்துக்கொள்ள கடவுள் இந்த நாளை தேர்ந்தெடுத்தார். அவளை நாங்கள் இழந்தாலும், அவளுடைய புன்னகையால் வானத்தை பிரகாசமாக்குவாள். அவள் தன் நோக்கத்தை நிறைவேற்றி, அவளின் அன்புப் பரிசை எங்களுக்கு விட்டுச் சென்று இருக்கிறாள்" என கிளேசியின் குடும்ப நண்பரான பாஸ்டர் ஜாக் அப்ரூ தெரிவித்துள்ளார்.

டான்சில்ஸ் அறுவைசிகிச்சை, உயிரிழந்த முன்னாள் `மிஸ் பிரேசில்’ - என்ன நடந்தது?
இன்ஸ்டா

50,000-க்கு மேற்பட்ட இன்ஸ்டா ரசிகர்கள் இவருக்கு இருக்கும் நிலையில், இவரின் இழப்பு பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இவரின் ஆன்மா நிம்மதியடைய பிரார்த்தனை செய்வதாகப் பதிவிட்டுள்ளனர்.

டான்சில்ஸ் அறுவைசிகிச்சையைத் தொடர்ந்து 27 வயது இளம்பெண் உயிரிழந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.