Published:Updated:

`என் மார்பகங்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன்!’ - கேலிக்கு பதிலடி கொடுத்த இலங்கை முன்னாள் எம்.பி

முன்னாள் எம்.பி ஹிருணிகா

’போலீஸாருடனான கைகலப்பின்போது வெளிப்பட்ட என் மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது தங்கள் தாயின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவரர்களாகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகிறேன்.’

`என் மார்பகங்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன்!’ - கேலிக்கு பதிலடி கொடுத்த இலங்கை முன்னாள் எம்.பி

’போலீஸாருடனான கைகலப்பின்போது வெளிப்பட்ட என் மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது தங்கள் தாயின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவரர்களாகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகிறேன்.’

Published:Updated:
முன்னாள் எம்.பி ஹிருணிகா

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் உள்ள அவரது வீட்டின் முன் கடந்த புதன் கிழமை ஐக்கிய மக்கள் சக்தி பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் ரணில் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்த பெண்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட இலங்கையின் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முன்னாள் எம்.பி ஹிருணிகா
முன்னாள் எம்.பி ஹிருணிகா

தள்ளுமுள்ளின்போது ஹிருணிகாவை புகைப்படம் எடுத்த சிலர், சமூக வலைதளங்களில் படங்களைப் பகிர்ந்து ஹிருணிகாவின் மார்பகங்கள் குறித்து தவறாகப் பதிவிட்டனர். அவர்களின் பதிவுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிருணிகா பிரேமசந்திர, தனது பேஸ்புக் பக்கத்தில் மார்பகங்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

’’என் மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன். மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்குச் சௌகர்யமளித்து, எனது மொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.(போலீஸாருடனான கைகலப்பின் போது) வெளிப்பட்ட என் மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது தங்கள் தாயின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், என் மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!"

- ஹிருணிகா பிரேமச்சந்திர

முன்னாள் எம்.பி ஹிருணிகாவின் பதிவு
முன்னாள் எம்.பி ஹிருணிகாவின் பதிவு

இலங்கை முன்னாள் எம்.பி ஹிருணிகாவின் இந்தப் பதிவு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்துக்குப் பின் காவல்துறையினரை கட்டியணைத்து சமாதானத்தில் ஈடுபட்ட ஹிருணிகாவின் செயல் கவனத்தைப் பெற்று வருகிறது.