Published:Updated:

`அதிர்ச்சி’ அமெரிக்கா.. `லாக்-டவுன்’ ஈரோடு.. காரணம்..?' -கொரோனா அப்டேட்ஸ்

கொரோனா
கொரோனா

கொரோனா தொடர்பாக இத்தாலி, ஈரான், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி ரகமாக உள்ளன.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் மெல்ல மெல்ல உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் இந்த வைரஸ் பரவலை அலட்சியமாக எடுத்துக்கொண்ட பல நாடுகள் தற்போது அதற்கான விலையைக் கொடுத்துவருகிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி ரகமாக உள்ளன. கொரோனா வைரஸ் குறித்த அப்டேட்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

கொரோனா
கொரோனா

உலகம்:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள்: 192

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 3,36,638

கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை: 14,611

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை: 97,636

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை: 2,13,751

இதில் 10,640 பேரின் நிலை சற்று மோசமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.!

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று’- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
#NowAtVikatan

சீனாவில் கொரோனா வைரஸ் முதன் முதலாகப் பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. ஆனால் கடந்த ஒருவார காலமாக சீனாவில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக மாதக் கணக்கில் முடக்கப்பட்ட நகரமான வுகானில் கடந்த சில நாள்களாக கொரோனாவால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. அதே போன்று கடந்த சில நாள்களாக சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஒற்றை இலக்கமாகியுள்ளது. இதனால் சீனாவில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கடந்த சில நாள்களாவே இத்தாலியின் நிலை, உலக நாடுகளை கவலை கொள்ளச் செய்துள்ளது. தற்போதுவரை இத்தாலியில் 59,138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,476 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,476 மக்கள் புதிதாக கொரோனா தாக்குதலுக்கு உள்ளானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று 651 மரணங்கள் நேற்று ஒருநாளில் பதிவாகியுள்ளன.

ஸ்பெய்ன் டு கோவை... கல்லூரி மாணவிக்கு கொரோனா பாதிப்பு வந்தது எப்படி?

இத்தாலிக்கு அடுத்த இடங்களில் ஈரான், ஸ்பெயின் நாடுகள் இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 33,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,139 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 414. நேற்று ஒருநாளில் மட்டும் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 112. இப்படி அமெரிக்காவும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. நியூயார்க் கவர்னர், நகரத்தில் 40% முதல் 80% மக்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் எனக் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை

இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் நேற்று மட்டும் கொரோனால் 375 பேர் இறந்துள்ளனர். ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

இந்தியா:

இந்தியாவை பொறுத்தவரை தற்போதுவரை கொரோனாவால் 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 24 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் தற்போது வரை கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாளில் 2 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் கொரோனா உறுதி செய்யபட்ட நபர்களின் எண்ணிக்கை 64. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்கள்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 74 பேரும், கேரளாவில் 67 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா
கொரோனா
ANI

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக மக்கள் நடமாட்டத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இத்தாலி இந்த விவகாரத்தை முதலில் அலட்சியப்போக்காகக் கையாண்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அதனால் அலட்சியம் தவிர்த்து அத்தியாவசியம் என்றால் மட்டும் வெளியே சென்று வரலாம். அப்படி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் கை மற்றும் முகங்களை நன்றாகக் கழுவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகம்:

தமிழத்தில் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் கடந்த ஒருமாத காலத்தில் பயணங்கள் மேற்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். சிறு அறிகுறி தெரிந்தாலும் மருத்துவமனையை அணுக வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, காஞ்சி, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் லாக்-டவுன் செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஈரோடு ஏன் இந்தப் பட்டியலில் உள்ளது எனப் பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ``தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த இருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. அவர்கள் பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, இதனால்தான் ஈரோடும் மாவட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது ” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு