Published:Updated:

BeirutBlast : `இந்தியா முதல் இத்தாலி வரை!’ - லெபனானுக்கு துணை நிற்கும் நாடுகள்

லெபனான் ( AP )

``பெய்ரூட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கொடூரமான இந்தச் சம்பவத்தில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.”

BeirutBlast : `இந்தியா முதல் இத்தாலி வரை!’ - லெபனானுக்கு துணை நிற்கும் நாடுகள்

``பெய்ரூட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கொடூரமான இந்தச் சம்பவத்தில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.”

Published:Updated:
லெபனான் ( AP )

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் மிகவும் பயங்கரமான வெடி விபத்து சம்பவம் நேற்று நடந்தது. உலகையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியில் இருந்து பலரும் இன்னும் மீளவில்லை என்றே கூறலாம். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கும் விதமாக உள்ளன. இந்த விபத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் 6 ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்ட 2,750 அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது என்று லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் தெரிவித்துள்ளார். மிகவும் சங்கடமான சூழ்நிலையில் இருக்கு லெபனானுக்கு உலக நாடுகள் பலவும் தங்களது ஆதரவையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகிறது.

லெபனான்
லெபனான்
AP

இந்தியா :

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``பெய்ரூட் நகரில் நடந்த வெடி விபத்தால் அதிகளவில் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் :

அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ``பெய்ரூட்டில் நடந்த விபத்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. லெபனானியர்களுக்கு எனது சகோதரத்துவ ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். லெபனானுக்கு பிரான்ஸ் எப்போதும் துணையாக நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் வெஸ் லெ ட்ரையன், ``லெபனான் அதிகாரிகள் கேட்கும் எந்த உதவியையும் பிரான்ஸ் செய்ய தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜெர்மனி :

ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகம், பெய்ரூட்டில் நடந்த விபத்தில் ஜெர்மன் தூதரக ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. துறைமுகத்தில் இருந்து தொலைவில் உள்ள ஜெர்மன் தூதரக கட்டடம் சேதமடைந்துள்ளதாகவும் ஆனால், எவ்வளவு அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை தீர்மானிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஜெர்மன் அதிபர் மெர்கேல் தனது செய்தித் தொடர்பாளர் வாயிலாக, இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் லெபனானுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

லெபனான்
லெபனான்
AP

இங்கிலாந்து :

பிரதமர் போரிஸ் ஜான்சன், ``பெய்ரூட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கொடூரமான இந்தச் சம்பவத்தில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன். எங்களால் முடிந்த எந்த உதவியையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா :

அதிபர் ட்ரம்ப் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``லெபனானுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. நாங்கள் உதவிக்காக அங்கு இருப்போம். இந்தச் சம்பவம் பயங்கரமான தாக்குதல் போல தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார். அதேபோல வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, ``லெபனான் மக்கள் இந்தக் கொடூரமான துயரத்தில் இருந்து மீண்டுவர உதவ தயாராக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இத்தாலி:

வெளியுறவுத்துறை அமைச்சர் லுய்கி டி மையோ, ``லெபனான் நண்பர்களுடன் இந்தத் துயரமான தருணத்தில் இத்தாலி துணை நிற்கிறது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக மீளவும் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

பெய்ரூட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக துருக்கி, இரான், இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் மலேசியா உட்பட பல நாடுகளும் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருவதோடு எந்த வகையிலும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. உலகளவில் பல நாடுகளில் உள்ள மக்களும் தங்களது கவலையையும் ஆதரவையும் சமூக வலைதளங்கள் வழியாக தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism