Published:Updated:

`கேக் எல்லாம் கிடையாது; ஏழு மணிநேரப் போராட்டம்!’ -இது கிரேட்டா தன்பெர்க்கின் பிறந்தநாள்

தன்னுடைய போராட்டங்களின் மூலம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த கிரேட்டா தன்பெர்க், நேற்று தன்னுடைய 17-வது பிறந்தநாளையும் போராட்டத்துடன் தொடங்கியுள்ளார்.

கிரேட்டா தன்பெர்க்
கிரேட்டா தன்பெர்க் ( twitter )

கிரேட்டா தன்பெர்க், சூழலியல் செயல்பாட்டாளராக உலக அளவில் அறியப்படுபவர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா, ``காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்பதை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார். 2019-ம் ஆண்டின் சிறந்த நபராக டைம்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

greta
greta
twitter

ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே வகுப்பறைகளைப் புறக்கணித்துவிட்டு தன்னுடைய பதினைந்து வயதில் போராட்டங்களைத் தொடங்கினார், கிரேட்டா. இவருடைய போராட்டங்கள்தான் உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களைச் சுற்றுசூழலுக்கு ஆதரவாகப் போராடத் தூண்டியது. 16 வயதில், தன்னுடைய போராட்டங்களின் மூலம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த கிரேட்டா, நேற்று தன்னுடைய 17-வது பிறந்தநாளையும் போராட்டத்துடன் தொடங்கியுள்ளார்.

கிரேட்டாவின் பிறந்தநாளையொட்டி சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றும் நடந்துள்ளது. அந்நிகழ்வுக்கு கிரேட்டாவின் ட்விட்டர் ரியாக்‌ஷன் செம!
twitter
ட்ரம்பின் ``Chill கிரேட்டா, Chill!” ட்வீட்டைக் கலாய்த்த கிரேட்டா தன்பெர்க்!

தன்னுடைய பிறந்தநாள் தொடர்பாக கிரேட்டா பேசுகையில், ``நான் பிறந்தநாளை கொண்டாடும் நபர் அல்ல. எப்போதும் போலவே. ஸ்வீடன் பாராளுமன்றத்துக்கு வெளியே காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை போராட்டங்களை நடத்துவேன். பின்னர், வீட்டுக்குச் செல்வேன். எனது பிறந்தநாளுக்கு கேக் கிடையாது. ஆனால், இரவு உணவு சாப்பிடுவோம். கடந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமாகவும் பரபரப்பாகவும் அமைந்தது. ஆனால், சிறந்த ஆண்டாகும். ஏனெனில், என்னுடைய வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டுமென்பதைக் கண்டுபிடித்திருகிறேன். நான் செய்வதும் சமுதாயத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது” என்றார்.

`உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ -  ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க்

கடந்த வியாழக்கிழமை பி.பி.சி `செலிபிரிட்டி மாஸ்டர் மைண்ட்’ என்ற விநாடி வினா நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கலந்துகொண்ட நடிகை அமெண்டா ஹென்சரிடம் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜான் ஹம்ப்ரிக்ஸ் கேள்வி ஒன்றைக் கேட்டார். இந்த கேள்விக்கு அமெண்டா பதில் சொல்லும் வீடியோ சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது.

Greta's twitter page
Greta's twitter page

``ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளரின் உரைகள் அடங்கிய `நோ ஒன் இஸ் டு ஸ்மால் டு மேக் எ டிஃப்ஃபரன்ஸ்’ என்கிற புத்தகம் 2019-ல் வெளியானது. அந்தச் செயற்பாட்டாளரின் பெயர் என்ன?” என்பதுதான் அந்தக் கேள்வி.

அமெண்டா, இந்தக் கேள்விக்கு ``ஷேரோன்” என்று பதில் கூறினார். இந்தச் செய்தி கிரேட்டாவின் கவனத்துக்கு வந்தது. உடனே, தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலிருந்த பெயரை ``ஷேரோன்” என மாற்றியுள்ளார். கிரேட்டாவின் இந்தத் திடீர் மாற்றத்தால் குழம்பிய நெட்டிசன்கள், காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்து வீடியோவைப் பகிர்ந்து சிரித்துக் கொண்டாடி வருகின்றனர்.

`உங்க நாடுகளிலேயே பிரச்னை இருக்கு; எனக்கு விருது வேண்டாம்!'- சர்வதேச விருதை உதறிய கிரேட்டா தன்பர்க்